தூத்துக்குடியில் தவெக ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மத்திய அரசைக் கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் தலைமை வகித்தார்.
இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.