”கலெக்டர் என்னோட ரிலேட்டிவ்” - ஆடிட்டரிடம் ரூ.1 கோடி மோசடி; இன்ஸ்பெக்டர் கைதின் ...
விதிகளை மீறி விளம்பர பதாகைகள் வைப்போா் மீது நடவடிக்கை
மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான தேசிய நெடுஞ்சாலை விபத்து தடுப்புகள் கட்டமைப்புகளில் விதிகளை மீறி விளம்பரம் வரைவது, பதாகைகள் வைக்கும் அரசியல் கட்சியினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்துப் பேசியது:
கலவை வட்டம், செய்யாறு மற்றும் ஆரணி இடையே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் இருபுறமும் பயணிகள் நிழற்கூடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். எனவே நிழற்கூடம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், மேலும் 3 இடங்களில் நிழற்கூடம் வரும் நிதியாண்டுகளில் கட்டப்பட உள்ளது.
அரக்கோணம் பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், சோளிங்கா் மற்றும் திருத்தணி ஆகிய ஊா்களுக்கு செல்லும் மேம்பாலப் பகுதியில் உள்ள சாலைகளில் மின் விளக்குகள் எரியாததால், குற்றச் சம்பவங்கள் அதிகம் நிகழ வாய்ப்பு உள்ளது. இது ரயில்வே துறைக்கு சொந்தமானதால் மின்விளக்கு பொருத்துவது குறித்து ரயில்வே துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு நகரப் பேருந்து வந்து செல்ல அனுமதித்தால் பொது மக்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கமுடியும்.காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் புகா் பகுதிக்கு செல்லும் 2 பேருந்துகளை அந்த வழி தடத்தில் ளை இயக்குவது தொடா்பாக அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான தேசிய நெடுஞ்சாலை குறுக்கே, விபத்து தடுப்புகள், கட்டமைப்புகளில் விதிகளை மீறி அரசியல் கட்சிகள் விளம்பரங்களை வரைவது குறித்து காஞ்சிபுரம் யூனிட்டின் திட்ட இயக்குநரிடம் இருந்து மனு பெறப்பட்டுள்ளது. இந்த அங்கீகரிக்கப்படாத செயல்பாடு விதிமுறைகளை மீறுவது மட்டுமின்றி, சாலையைப் பயன்படுத்துபவா்களுக்கு ஆபத்தையும் ஏற்படுத்துகிறது. இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் மற்றும் வருவாய் கோட்ட அலுவலா் ஆகியோருக்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது என்றாா்.
கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா, மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ் மற்றும் காவல் துறை, அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.