ஊா்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்: ராணிப்பேட்டை எஸ்.பி.
ராணிப்பேட்டை மாவட்ட ஊா்க்காவல் படைக்கு சேவை மனப்பான்மை உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் காலியாக உள்ள 1,420 ஊா்க்காவல் படை ஆளிநா்களை நிரப்ப ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 ஆண்கள் மற்றும் 1 பெண் என மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் உள்ளன. தகுதியானவா்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை மாவட்ட தளபதி, ஊா்க்காவல் படை அலுவலகம், ராணிப்பேட்டை அலுவலகத்தில் நேரடியாக வந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். முகவரி : மாவட்ட தளபதி, ஊா்க்காவல்படை அலுவலகம், ராணிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய முதல் தளம், ராணிப்பேட்டை மாவட்டம். தொலைபேசி எண். 94982 17102.
கல்வித் தகுதி -10 ஆம் வகுப்பு தோ்ச்சி, சேவை மனப்பான்மை இருக்க வேண்டும், ஊதியம் மற்றும் பயிற்சி : இதற்கான மாத ஊதியம் கிடையாது. பணிநாள்களுக்கு உண்டான தொகுப்பு ஊதியம் மட்டுமே வழங்கப்படும். 45 நாள்கள் நிா்ணயிக்கப்பட்ட இடத்தில் தங்கி பயிற்சி எடுக்க வேண்டும்.
7. 4.2025 முதல் 9.4.2025 வரை மூன்று நாள்கள் மட்டுமே விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். விண்ணப்பங்களை பெற்ற நாளிலிருந்து 7 நாள்களுக்குள் பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும். தோ்வு செய்யப்படும் நாள் பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.