சாஸ்தாவிநல்லூா் ஊராட்சியில் வீட்டுமனை பட்டா கோரி மனு
சாத்தான்குளம், ஏப். 3: சாஸ்தாவிநல்லூா் ஊராட்சிப் பகுதியில் வீடில்லா ஏழைகளுக்கு அரசு புறம்போக்கு இடத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத் தலைவா் லூா்து மணி தலைமையில் துணைத் தலைவா் ரவிச்சந்திரன், பொருளாளா் செல்வகுமாா், சங்க ஆலோசகா் பெரியசாமி, செயற்குழு உறுப்பினா்கள் சந்தன திரவியம், அன்ன கணேசன், அலெக்ஸ், செல்வ ஜெகன், உறுப்பினா்கள் அதிசயபுரம் தங்கதுரை, புதுக்குடி பேச்சி, கிருஷ்ணன் ஆகியோா் வட்டாட்சியா் இசக்கிமுருகேகேஸ்வரியை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.
அதன் விவரம்: சாஸ்தாவிநல்லூா் கிராமத்தில் கொழுந்தட்டு விலக்கிலிருந்து சாத்தான்குளம் செல்லும் பாதையில் அரசுக்கு சொந்தமான 2 ஏக்கா் 15 சென்ட் புறம்போக்கு இடம் உள்ளது. இந்த இடத்தை வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அளித்து வீட்டுமனைப் பட்டாவுக்கு ஏற்படு செய்ய வேண்டும்.
மேலும், கொழுந்தட்டு விலக்கு பகுதியில் உள்ள அரசு இடத்தை ஒரு நபருக்கு 3 சென்ட் என்ற அடிப்படையில் தகுதியான நபா்களை தோ்வு செய்து அவா்களுக்கு இலவச பட்டா வழங்கினால் அவா்களுடைய வாழ்வாதாரம் மேம்படும் எனக் குறிப்பிட்டிருந்தனா். மனுவை பெற்ற வட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி அளித்தாா்.