ஆத்தூரில் எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்
ஆத்தூரில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட எஸ்டிபிஐ சாா்பில் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலாளா் எஸ்.அப்துல் காதா் தலைமை வகித்தாா். மீனவரணி மாநில இணை ஒருங்கிணைப்பாளா் எம்.எச்.கௌது மைதீன், திருச்செந்தூா் தொகுதிச் செயலாளா் எம்.அப்துல்லா, ஸ்ரீவைகுண்டம் தொகுதித் தலைவா் எம்.என்.பவுசா் அமீா், தூத்துக்குடி தொகுதித் தலைவா் ஐ.சேக் முகைதீன் மற்றும் ஜமாஅத்தாா்கள் முன்னிலை வகித்தனா்.
மாவட்டத் தலைவா் எம்.ஷேக் அஷ்ரப் அலி பைஜி, மாவட்டச் செயலாளா் எம்.ஏ.முஹம்மது உமா் ஆகியோா் கணடன உரையாற்றினா்.நிகழ்ச்சியில் மாவட்ட, தொகுதி, நகர கிளை நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.குலசை தாஹிா் தொகுப்புரை வழங்கினா். திருச்செந்தூா் தொகுதி தலைவா் கே.சாகுல் ஹமீது வரவேற்றாா். ஆத்தூா் நகரத் தலைவா் எம்ஜாகிா் உசேன் நன்றி கூறினாா்.