செய்திகள் :

`பால் 43.8%, ஆடை 38.7%, காபி 29.7%..' அமெரிக்கா விதித்த வரி; இந்தியா என்ன செய்யப்போகிறது?

post image

'இந்தியாவிற்கு 26 சதவிகித வரி, சீனாவிற்கு 34 சதவிகித வரி, ஜப்பானுக்கு 26 சதவிகித வரி...'

- நேற்று முன்தினம் (ஏப்ரல் 2), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விகிதத்தை அடுக்கிக்கொண்டே போனார்.

'இவை'களுக்கு வரி இல்லை!

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து இந்தியப் பொருள்களுக்கும் 26 சதவிகித வரி விதிக்கப்பட்டாலும், இந்த வரிக்கு செமி-கண்டக்டர், பார்மசூட்டிக்கல், செம்பு உள்ளிட்ட பொருள்களுக்கு விதிவிலக்கு உண்டு.

இந்த வரி விலக்கு இந்தியாவிற்கு மட்டுமல்ல. அனைத்து நாடுகளுக்குமே பொருந்தும்.

'இவை'களுக்கு வரி இல்லை!|ட்ரம்ப்
'இவை'களுக்கு வரி இல்லை!|ட்ரம்ப்

எதற்கு, எவ்வளவு வரி?

இதெல்லாம் சரி... எந்தப் பொருளுக்கு எத்தனை வரி என்ற கேள்வி இப்போது எழும். முதலில் அமெரிக்கா எந்த பொருளின் மீது அடிப்படையாக எவ்வளவு வரி விதிக்கிறது என்பதை பார்த்துவிடுவோம்.

பால் பொருள்களுக்கு 16.8 சதவிகிதம், ஆடைக்கு 11.7 சதவிகிதம், ரசாயனங்களுக்கு 2.7 சதவிகிதம், காபி, தேநீர், கொக்கோ, மசாலாப்பொருட்களுக்கு 1.5 சதவிகிதம், எலக்ட்ரானிக் பொருட்களுக்கு 1.2 சதவிகிதம்.

இதே பொருள்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரியின் படி, அமெரிக்கா இந்தியாவிடம் இருந்து வசூலிக்கப்போகும் வரி அளவு முறையே 43.8 சதவிகிதம், 38.7 சதவிகிதம், 29.7 சதவிகிதம், 28.5 சதவிகிதம், 28.2 சதவிகிதம் ஆகும்.

இன்னும் முக்கிய துறைகளாக நகைகள் மற்றும் நவரத்தினங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, உணவு மற்றும் விவசாயப் பொருள்களுக்கு வரிகள் முறையே 5.5 - 13.5 சதவிகிதத்தில் இருந்து 32.5 - 40.5 சதவிகிதமும், 5.2 சதவிகிதத்தில் இருந்து 32.2 சதவிகிதமும், 4.5 சதவிகிதத்தில் இருந்து 31 - 32 சதவிகிதமும் உயர்த்தப்படுகிறது.

பேச்சுவார்த்தைக்கு தயார் - ட்ரம்ப்
பேச்சுவார்த்தைக்கு தயார் - ட்ரம்ப்

இந்த வரிகள் தான் தொடருமா?

ஆக, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இதே வரி தான் தொடருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அப்படி தொடர்ந்தால் அது அந்த நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, உலகம் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத்தையே பாதிக்கும்.

குறிப்பாக, இந்த வரி உயர்வினால் இந்த இறக்குமதி பொருள்களின் விலை உயர்ந்து அமெரிக்காவின் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

'இந்த வரி தொடரும்' என்று சற்றும் மாறாமல் அமெரிக்கா வெள்ளை மாளிகை கூறியிருக்கிறது. ஆனால், அந்த வெள்ளை மாளிகைக்கும், அமெரிக்காவிற்கும் அதிபரான ட்ரம்ப், "பேச்சுவார்த்தைக்கு தயார்" என்று மற்ற உலக நாடுகளுக்கு தூது விட்டுள்ளார்.

எதிர்பார்க்கப்படுவது என்ன?

பிற நாடுகள் அமெரிக்க பொருள்கள் மீது விதிக்கும் வரியை குறைக்க வேண்டும் என்பது தான் ட்ரம்ப்பின் ஒற்றை குறிக்கோள். அப்படி எந்த நாடு குறைக்கிறதோ, அந்த நாட்டின் மீதான வரியை ட்ரம்ப் குறைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் 'அமெரிக்க பொருள்கள் மீதான் வரி குறைப்பு' என்ற அறிவிப்புகளை பல நாடுகளிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்தியா என்ன செய்யப்போகிறது?

கடந்த வாரத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா அதிகாரிகளுக்கு இடையே வரி குறித்த பேச்சுவார்த்தை நடந்தது.

மேலும், இந்த ஆண்டின் இறுதியில் இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே வணிக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் விளைவாக, அமெரிக்கா நம் மீதான வரிகளை குறைக்க வாய்ப்புகள் உள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Modi TN Visit: `ராமேஸ்வரம், மதுரை' - பிரதமர் மோடியின் தமிழக விசிட்டும், தகிக்கும் அரசியல் களமும்

டெல்லிக்குஅ.தி.மு.க தலைவர்கள் படையெடுப்பு, பா.ஜ.க மாநிலத் தலைவர் மாற்றம் தொடர்பான பரபரப்பு, ‘மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில்’ பா.ஜ.க-வுக்கு எதிராக தி.மு.க கூட்டணி போர்க்கொடி... என... மேலும் பார்க்க

``ஒரே நாடு ஒரே தேர்தல் எப்போது நடைமுறைக்கு வரும்..'' - நிர்மலா சீதாராமன் விளக்கம்

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’என்ற அஜண்டாவை பா.ஜ.க தீவிரமாக நகர்த்தத் தொடங்கியிருக்கிறது. இன்னொரு புறம், ‘இது நடைமுறைச் சாத்தியமற்றது. கூட்டாட்சி முறைக்கு எதிரானது’ என்று எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கின்றன. மோடி... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: பள்ளி மாணவன் துடைப்பத்தால் தாக்கப்பட்ட விவகாரம் - சத்துணவு பணியாளர்கள் இருவரும் கைது

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஊராட்சி ஒன்றியத்துக்குஉட்பட்ட செங்குணம் கொல்லைமேடு பகுதியில் செயல்பட்டுவரும் அரசு தொடக்கப் பள்ளியில், மாணவ - மாணவிகளுக்காக வழங்கப்படும் சத்துணவு முட்டைகளை சத்துணவு தயாரிக... மேலும் பார்க்க

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்குவிப்பு; அதிகாரியின் பணி ஓய்வை நிறுத்தி வைத்து அரசு அதிரடி உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்த புகாரில் அதிகாரியின் பணி ஓய்வை நிறுத்தி வைக்க நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுகுறித்து நகராஞ்சி வட்டத்தில் சிலரிடம் விசாரித்தோம். அப்போது நம்... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டுக்கு ரூ.2151 கோடி; நிலைக்குழுவின் அறிவுரையை புறக்கணிக்கிறதா மத்திய அரசு?' - ப.சிதம்பரம்

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையையும், அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கை பெயரிலான இந்தித் திணிப்பையும் எதிர்த்து கடந்த நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கடும் விவ... மேலும் பார்க்க

முல்லைப்பெரியாறு பிரச்னை; 'எம்புரான்' படக் காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் விவாதம்!

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகியிருக்கும் `எல் 2: எம்புரான்'அரசியல் தளத்தில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஒருபுறம் கேரளாவில் இந்து மதத்தினரைப் புண்படுத்தும் விதமாக இடம் பெ... மேலும் பார்க்க