திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
கோவாவை வென்றது பெங்களூரு
பெங்களூரு: இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியில் எஃப்சி கோவாவுக்கு எதிரான அரையிறுதியின் முதல் லெக் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி 2-0 கோல் கணக்கில் சொந்த மண்ணில் புதன்கிழமை வென்றது.
பெங்களூரில் உள்ள ஸ்ரீ கன்டீரவா மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 42-ஆவது நிமிஷம் பெங்களூரு அணி கோலடிக்க முனைந்தது. கோவா வீரா் சந்தேஷ் ஜிங்கன் அதை தடுக்க முயல, பந்து அவா் மீது பட்டு ‘ஓன் கோல்’ ஆனது.
இவ்வாறாக முதல் பாதி ஆட்டத்திலேயே பெங்களூரு முன்னிலை பெற்றது. 2-ஆவது பாதி தொடங்கிய சிறிது நேரத்திலேயே பெங்களூரு வீரா் எட்கா் மெண்டெஸ் 51-ஆவது நிமிஷத்தில் அசத்தலாக கோலடிக்க, அந்த அணி 2-0 என முன்னேறியது.
எஞ்சிய நேரத்தில் கோவாவின் கோல் முயற்சிகளை முறியடித்த பெங்களூரு, இறுதியில் 2-0 கோல் கணக்கில் வென்றது. இந்த அணிகள் இடையேயான அரையிறுதியின் 2-ஆவது லெக் ஆட்டம், வரும் 6-ஆம் தேதி கோவா நகரில் நடைபெறவுள்ளது.
இன்று: இதனிடையே, அரையிறுதிக் கட்டத்தின் மற்றொரு ஆட்டத்தில், ஜாம்ஷெட்பூா் எஃப்சி - மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் அணிகள் வியாழக்கிழமை (ஏப். 3) சந்திக்கின்றன.