'திருக்குறளும், இந்தி பாடலும்' நிர்மலா சீதாராமன் Vs திருச்சி சிவா - மாநிலங்களவைய...
பஞ்சாயத்து 4-ஆவது சீசன் ரிலீஸ் தேதி!
பஞ்சாயத்து இணையத்தொடரின் 4ஆவது சீசனின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான பஞ்சாயத்து எனும் இணையத் தொடர் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.
டிவிஎஃப் தயாரித்த இந்தத் தொடரினை தீபக் குமார் மிஸ்ரா இயக்கியிருந்தார்.
மிகவும் வரவேற்பைப் பெற்றதால் இதன் 2ஆவது சீசன் 2022இல் வெளியானது. அடுத்த 3ஆவது சீசன் கடந்தாண்டு வெளியாகி அதுவும் ஹிட் அடித்தது.
இந்நிலையில், வரும் ஜூலை 2ஆம் தேதி இதன் 4ஆவது சீசன் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்திரப் பிரதேசத்தில் என்ஜினியரிங் படித்த பட்டதாரி வேலையில்லாமல் பஞ்சாயத்து அலுவலத்தில் வேலைக்கு சேர்வார். அங்கு நடைபெறும் கதைக்களத்தில் நகைச்சுவை காட்சிகள் மிகவும் கவனம் பெற்றன.
இந்தத் தொடரில் நீனா குப்தா, ரகுபீர் யாதவ், ஃபைசல் மாலிக், சந்தன் ராய், சன்விகா, துர்கேஷ் குமார் என பலர் நடித்துள்ளார்கள்.
