செய்திகள் :

ஒரேயொரு வாழ்க்கை வரலாறாக வாழ வேண்டும்...! விக்ரம் வெளியிட்ட விடியோ!

post image

வீர தீர சூரன் குறித்து நடிகர் விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

தங்கலான் படத்திற்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் வீர தீர சூரன். சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கிய இந்தப் படம் கடந்த வியாழனன்று (மார்ச் 27) திரையரங்குகளில் வெளியானது.

நிதி பிரச்னையால் படம் வெளியான அன்று முதல் 2 காட்சிகள் திரையிடப்படவில்லை. மாலை 4 மணிக்கே முதல் காட்சி வெளியானது.

அதிரடியான ஆக்சன் படமாக உருவாகியிருந்த வீர தீர சூரன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

முக்கியமாக, கடந்த சில ஆண்டுகளில் வெளியான விக்ரம் படங்களில் ரசிகர்களைக் கவரும் கமர்ஷியல் அம்சங்களுடன் இந்தப் படமே இருந்ததாக அவரது ரசிகர்கள் கூறினர்.

ஒரேயொரு வாழ்க்கை வரலாறாக வாழ வேண்டும்

தனது இன்ஸ்டா பக்கத்தில் விக்ரம் கூறியதாவது:

ஒரேயொரு வாழ்க்கை வரலாறாக வாழ்ந்து... அப்படி என ஒருவன் எளிமையாக சொல்லிவிட்டு சென்றுவிட்டான் (மகான் பட வசனத்தை நினைவுக் கூறுகிறார்). ஆனால், இந்த வாழ்க்கை இருக்கிறதே எதாவது ஒரு பிரச்னையை தூக்கி வீசுகிறது.

உதாரணமாக வீர தீர சூரன் படம் ரிலீஸுக்கு முன்பாக பயங்கரமாக பாராட்டி அனைவரையும் ஆர்வத்தில் ஆழ்த்தினார். அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான், சட்டப் பிரச்னை. உயர் நீதிமன்றம் இதை 4 வாரங்களுக்கு தடை எனக் கூறியது.

நானும் எனது இயக்குநரும் இதில் நடித்த அனைவரும் மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறோம். ரசிகர்களிடம் எப்படியாவது இதைக் கொண்டு சேர்க்க வேண்டுமென நினைத்தோம். என்னால் செய்ய முடிந்ததைச் செய்தேன்.

பேராதரவுக்கு நன்றி

எனது ரசிகர்களுக்காக மிகவும் எதார்த்தமான, வித்தியாசமான கமர்ஷியல் படத்தை தர நினைத்துதான் இந்தப் படத்தில் நடித்தேன்.

முதலிரண்டு காட்சிகள் இல்லாமல் வெளியானால் அந்தப் படம் அவ்வளவுதான் என்பது வழக்கமானது. ஆனால், படம் வெளியான பிறகு மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்தது. குறிப்பாக குடும்பத்திடம் இருந்து பேராதரவு கிடைத்தது. உங்கள் அனைவருக்கும் நன்றி கூற வேண்டும்.

படம் பெரிய வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என உறுதியாக கூறுகிறேன். நாங்கள் நினைத்தது நடந்தது. படம் பார்த்தவர்கள் மகிழ்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். பார்க்காதவர்கள் பார்ப்பீர்கள் என நம்புகிறேன் என்றார்.

வெளியானது குட் பேட் அக்லி டிரைலர் !

குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. அஜித்தின் முந்தைய படமான விடாமுயற்சி படம் ச... மேலும் பார்க்க

பசூக்கா படத்தின் முதல் பாடல் வெளியானது!

மம்மூட்டி நாயகனாக நடிக்கும் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு பெற்றது.இதில் மம்மூட்டியுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் சித்தார்த் ... மேலும் பார்க்க

பிரசாந்த் - இயக்குநர் ஹரி கூட்டணி மீண்டும் இணைகிறதா?

நடிகர் பிரசாந்த் - இயக்குநர் ஹரி கூட்டணி புதிய படத்திற்காக மீண்டும் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் பிரசாந்த் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்தாண்டு அந்தகன், தி கோட் போன்ற இரு த... மேலும் பார்க்க

தேவா வாராரு... கூலி வெளியீட்டுத் தேதி!

நடிகர் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் கூலி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு வெளியானது. நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படமான கூலி படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இ... மேலும் பார்க்க