கேட்பாரின்றி கிடந்த 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: ரயில்வே போலீசார் விசாரணை
சென்னை விம்கோ நகர் ரயில்வே நடைமேடையில் கேட்பாரின்றி கிடந்த 500 கிலோ ரேசன் அரிசி ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
சென்னை விம்கோ நகர் ரயில்வே நடைமேடையில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, நடைமேடை பகுதியில் பயணியர் அமரும் இருக்கையின் கீழ், மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன்படி, 25 கிலோ எடையுள்ள 20 மூட்டை அரிசியை கைப்பற்றிய கொருக்குபேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயிலிலிருந்து தவறி விழுந்து இளைஞர் பலி
பறிமுதல் செய்யப்பட்ட 500 கிலோ ரேசன் அரிசியை, பட்டரவாக்கம் குடிமை பொருள் வழங்கல் சிஐடி வசம், ஒப்படைத்தனர்.
வடசென்னை இருந்து ரயில்கள் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவது வாடிக்கையாக நடைபெற்று வருவதாகவும் இதை தடுக்கும் நோக்கத்தில் போலீசார் ஈடுபட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.