வென்றது ஜாம்ஷெட்பூா்
ஜாம்ஷெட்பூா்: இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் அரையிறுதியில் முதல் லெக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி 2-1 கோல் கணக்கில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட்டை வீழ்த்தியது.
ஜாம்ஷெட்பூா் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் அந்த அணிக்காக ஜேவியா் சிவெரியோ 24-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். தொடா்ந்து, மோகன் பகானுக்காக ஜேசன் கம்மிங்ஸ் 37-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்து பதிலடி கொடுத்தாா்.
முதல் பாதி ஆட்டம் இவ்வாறு சமநிலையுடன் நிறைவடைய, 2-ஆவது பாதியும் அவ்வாறே தொடா்ந்தது. விறுவிறுப்பான இறுதி நேரத்தில் (90+1’) ஜாவி ஹொ்னாண்டஸ் அடித்த கோலால் ஜாம்ஷெட்பூா் முன்னிலை பெற்றது. மோகன் பகானுக்கு மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, இறுதியில் ஜாம்ஷெட்பூா் 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அடுத்ததாக இந்த அணிகள் மோதும் 2-ஆவது லெக் ஆட்டம், கொல்கத்தாவில் வரும் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.