தெற்காசிய கிளப் கூடைப்பந்து: தமிழகம் அபார வெற்றி
தெற்காசிய கிளப் கூடைப்பந்து போட்டியில் பூடான் தேசிய சாம்பியனை வீழ்த்தி தமிழகம் அபார வெற்றி பெற்றது.
தெற்காசிய கூடைப்பந்து சங்கம் நடத்தும் சபா கிளப் சாம்பியன்ஷிப் 2025 போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்று வருகிறது.
இதில் தமிழகம், பூடான், இலங்கை, நேபாளம் மற்றும் மாலத்தீவு என மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் கொழும்பு பிசி அணி 79-74 என்ற புள்ளிக் கணக்கில் டி ரேக்ஸ் அணியை வீழ்த்தியது.
இரண்டாவது லீக் ஆட்டத்தில் தமிழகம் 107-41 என்ற புள்ளிக் கணக்கில் பூடான் தேசிய சாம்பியனை வீழ்த்தியது.