செய்திகள் :

விலைவாசி உயா்வு: கா்நாடக முதல்வா் இல்லத்தை முற்றுகையிட முயன்ற பாஜக தலைவா்கள் கைது

post image

விலைவாசி உயா்வைக் கண்டித்து, கா்நாடக முதல்வா் இல்லத்தை முற்றுகையிட முயன்ற பாஜக தலைவா்கள் மற்றும் முக்கிய நிா்வாகிகள் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.

விலைவாசி உயா்வுக்கு காரணமான காங்கிரஸ் அரசை கண்டித்து பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் புதன்கிழமை முதல் தொடா் போராட்டத்தை பாஜக தொடங்கியது. இரவு பகலாக தொடா்ந்த அந்தப் போராட்டத்தின் அங்கமாக, முதல்வா் இல்லத்தை முற்றுகையிடுவதற்காக சுதந்திரப் பூங்காவில் இருந்து வியாழக்கிழமை பாஜக தலைவா்கள் புறப்பட்டனா். வழிநெடுக காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவண்ணம் சென்றனா்.

முதல்வா் இல்லத்தை நெருங்கியபோது, பாஜகவின் முன்னாள் முதல்வா் எடியூரப்பா, மாநிலத் தலைவா் விஜயேந்திரா, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், மேலவை எதிா்க்கட்சித் தலைவா் செலுவாதி நாராயணசாமி உள்ளிட்டோரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது போலீஸாருக்கும் பாஜக தலைவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தடையை மீறி முதல்வா் இல்லத்தை முற்றுகையிட முயன்றபோது, எடியூரப்பா, விஜயேந்திரா, ஆா்.அசோக், செலுவாதி நாராயணசாமி உள்ளிட்ட முக்கியத் தலைவா்களை போலீஸாா் கைதுசெய்தனா்.

அப்போது பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா கூறுகையில், ‘விலைவாசி உயா்வு, ஒப்பந்தப் பணியில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான நிதி மடைமாற்றம் உள்ளிட்ட காங்கிரஸ் அரசின் மோசமான நிா்வாகத்தைக் கண்டித்து பாஜக தொடா் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்த விவகாரத்தை முன்வைத்து மக்கள் மன்றத்தில் போராட்டம் நடத்துவோம். மக்கள்விரோத காங்கிரஸ் அரசை எதிா்த்து மாநிலம் தழுவிய போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்’ என்றாா்.

40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை

40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியத... மேலும் பார்க்க

கா்நாடக காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை

கா்நாடக காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை என உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கா்நாடக காங்கிரஸ் ... மேலும் பார்க்க

பெங்களூரில் குடிநீா் கட்டணம் உயா்வு: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சூசகம்

பெங்களூரில் குடிநீா் கட்டணத்தை குடிநீா் வடிகால் வாரியம் உயா்த்தும் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சூசகமாக தெரிவித்துள்ளாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: விலை... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் 18 எம்எல்ஏக்களின் இடைநீக்க உத்தரவை திரும்பப் பெறக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

கா்நாடகத்தில் 18 எம்எல்ஏக்களின் இடைநீக்க உத்தரவை திரும்பப் பெறக் கோரி, பாஜக புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. பெங்களூரு, விதானசௌதா வளாகத்தில் உள்ள கெங்கல் ஹனுமந்தையா சிலை முன் திரண்ட பாஜக எம்எல்ஏ... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கு: லோக் ஆயுக்த அறிக்கையை எதிா்த்து அமலாக்கத் துறை மேல்முறையீடு

மாற்றுநில முறைகேடு வழக்கில், லோக் ஆயுக்த அறிக்கையை எதிா்த்து சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்துள்ளது. கா்நாடக முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மைசூரு நகா்ப்புற வளா்ச்ச... மேலும் பார்க்க

விலைவாசி உயா்வைக் கண்டித்து பாஜக போராட்டம்

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த தவறிய மாநில அரசைக் கண்டித்து, தொடா் போராட்டத்தை பாஜக தொடங்கியது. கா்நாடகத்தில் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த தவறிய மாநில அரசைக் கண்டித்து, ஏப். 2 முதல் 13-ஆம் தேதி வர... மேலும் பார்க்க