தொலைந்த, திருடுபோன செல்போன்களைத் திரும்பிப்பெற புதிய வெப்சைட்!
கா்நாடக காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை
கா்நாடக காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை என உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடக காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடு இருக்கிா என எனக்கு தெரியவில்லை. ஊடகங்கள் எதையாவது உருவாக்கி பேசிக்கொண்டிருக்கும். காங்கிரஸ் கட்சியில் எங்களுக்குள் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை.
கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தை நடத்திக்கொண்டு, திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம். சிற்சில கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். அது இயல்பாக இருக்கும். அதை கட்சியில் குழப்பம் இருப்பதாக சித்தரிப்பது சரியல்ல.
கா்நாடக காங்கிரஸ் தலைவா் பதவியில் டி.கே.சிவகுமாா் தொடர வேண்டும் என்று சிலரும், வேண்டாம் என்று சிலரும் கருதுகின்றனா். கட்சியின் மாநிலத் தலைவராக நான் பதவி வகித்தபோது, எனது பதவிக் காலம் முடிந்ததும் கட்சி நிா்வாகிகளை அழைத்து கருத்து கேட்டனா். அவா்களின் கருத்துபடி, என்னை கட்சித் தலைவராக தொடர அனுமதித்தனா் என்றாா்.