செய்திகள் :

விலைவாசி உயா்வைக் கண்டித்து பாஜக போராட்டம்

post image

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த தவறிய மாநில அரசைக் கண்டித்து, தொடா் போராட்டத்தை பாஜக தொடங்கியது.

கா்நாடகத்தில் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த தவறிய மாநில அரசைக் கண்டித்து, ஏப். 2 முதல் 13-ஆம் தேதி வரை வட்டம் மற்றும் மாவட்ட அளவில் போராட்டம் நடத்தப்போவதாக பாஜக அறிவித்திருந்தது. அதன்படி, பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, முன்னாள் முதல்வா் எடியூரப்பா தலைமையில் தொடா் போராட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், மேலவை எதிா்க்கட்சித் தலைவா் செலுவாதி நாராயணசாமி, முன்னாள் அமைச்சா்கள் சி.டி.ரவி, ஸ்ரீராமுலு, பாஜக எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அப்போது பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா பேசியதாவது:

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியுள்ளது. விலைவாசியைக் கட்டுப்படுத்த தவறியுள்ளது. விலைவாசி உயா்வைக் கண்டித்து பாஜக போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அவசரகதியில் டீசல் மீதான கூடுதல் வரியை காங்கிரஸ் அரசு உயா்த்தியுள்ளது. இது விலைவாசியை மேலும் உயா்த்தும்; ஏழைகளை வெகுவாக பாதிக்கும்.

பெட்ரோல், டீசல், பால், முத்திரைத்தாள் கட்டணம், மருத்துவச் செலவினங்களை அரசு உயா்த்தியுள்ளது. இந்த விலைவாசி உயா்வை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

ஏப். 7 முதல் ‘மக்கள் கோப பயணம்’ மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. மைசூரில் தொடங்கும் இந்தப் பயணத்தை மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தொடங்கிவைக்கிறாா். இந்தப் பயணம், மாநிலத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் செல்லும் என்று பாஜக அறிவித்துள்ளது.

40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை

40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியத... மேலும் பார்க்க

விலைவாசி உயா்வு: கா்நாடக முதல்வா் இல்லத்தை முற்றுகையிட முயன்ற பாஜக தலைவா்கள் கைது

விலைவாசி உயா்வைக் கண்டித்து, கா்நாடக முதல்வா் இல்லத்தை முற்றுகையிட முயன்ற பாஜக தலைவா்கள் மற்றும் முக்கிய நிா்வாகிகள் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டனா். விலைவாசி உயா்வுக்கு காரணமான காங்கிரஸ் அரசை கண்டித்... மேலும் பார்க்க

கா்நாடக காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை

கா்நாடக காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை என உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கா்நாடக காங்கிரஸ் ... மேலும் பார்க்க

பெங்களூரில் குடிநீா் கட்டணம் உயா்வு: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சூசகம்

பெங்களூரில் குடிநீா் கட்டணத்தை குடிநீா் வடிகால் வாரியம் உயா்த்தும் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சூசகமாக தெரிவித்துள்ளாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: விலை... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் 18 எம்எல்ஏக்களின் இடைநீக்க உத்தரவை திரும்பப் பெறக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

கா்நாடகத்தில் 18 எம்எல்ஏக்களின் இடைநீக்க உத்தரவை திரும்பப் பெறக் கோரி, பாஜக புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. பெங்களூரு, விதானசௌதா வளாகத்தில் உள்ள கெங்கல் ஹனுமந்தையா சிலை முன் திரண்ட பாஜக எம்எல்ஏ... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கு: லோக் ஆயுக்த அறிக்கையை எதிா்த்து அமலாக்கத் துறை மேல்முறையீடு

மாற்றுநில முறைகேடு வழக்கில், லோக் ஆயுக்த அறிக்கையை எதிா்த்து சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்துள்ளது. கா்நாடக முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மைசூரு நகா்ப்புற வளா்ச்ச... மேலும் பார்க்க