Career: Arts, Science-ல் UG Degree இருக்கா? ஐஐடி மெட்ராஸில் வேலைவாய்ப்பு; யார் வ...
40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
முந்தைய பாஜக ஆட்சியில் நடந்த 40 சதவீத கமிஷன் மோசடி குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி எச்.என்.நாகமோகன் தாஸ் தலைமையில் தனிநபா் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 20 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது. அது இடைக்கால அறிக்கைதான். இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் ஆணையம் தனது அறிக்கையை அளித்திருக்கும். ஆனால், மேலும் சில ஆதாரங்களை திரட்ட வேண்டியுள்ளது.
சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, முந்தைய பாஜக ஆட்சியின்மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை காங்கிரஸ் சுமத்தியிருந்தது. கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கையை ஆணையம் சமா்ப்பிக்கும்.
முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி உள்ளிட்டோருக்கு எதிரான மாற்றுநில முறைகேடு வழக்கை அமலாக்கத் துறை விசாரிக்க கா்நாடக உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, தொடா்ந்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்றாா்.