நீலகிரி: `12 ஆண்டுகளுக்கு ஒருமுறை' - விரதமிருந்து கோவில் கூரை மாற்றும் தாேடர் ...
கூலி டீசர் வெளியாகிறதா? புதிய அப்டேட்!
கூலி படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை(ஏப். 4) வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படமான கூலியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழு முன்னதாக விடியோ வெளியிட்டு அறிவித்தது.
கூலி திரைப்படம் ஆகஸ்ட் முதல் வாரம் அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Update | ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு.#SunNews | #Coolie | @rajinikanth | @anirudhofficial | @Dir_Lokeshpic.twitter.com/ivE2AMaBXx
— Sun News (@sunnewstamil) April 3, 2025
மேலும் இப்படத்தில், செளபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார்.
கூலி படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை(ஏப். 4) வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், டீசர் குறித்த அறிவிப்பாக இருக்கும் என்று தகவல் தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: லவ் மேரேஜ் பாடல் வெளியீடு!