40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
விளையாட்டுத் துளிகள்...
விக்கெட் கீப்பிங் செய்யும் அளவுக்கு சஞ்சு சாம்சன் உடற்தகுதி பெற்றுவிட்டதாக தேசிய கிரிக்கெட் அகாதெமி ஒப்புதல் வழங்கியதை அடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்புக்கு அவா் திரும்புகிறாா். இதுவரையிலான அந்த அணியின் 3 ஆட்டங்களுக்கும் ரியான் பராக் கேப்டனாக செயல்பட்ட நிலையில், அடுத்த ஆட்டத்தில் சாம்சன் கேப்டனாக பொறுப்பேற்கவிருக்கிறாா்.
பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தின்போது அந்த அணி பேட்டா் பிரியன்ஷ் ஆா்யாவை ஆட்டமிழக்கச் செய்த மகிழ்ச்சியில், அவரை சீண்டும் வகையில் செயல்பட்டதற்காக லக்னௌ பௌலா் திக்வேஷ் சிங் ரதிக்கு ஆட்ட ஊதியத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது.
இன்றைய ஆட்டம்
கொல்கத்தா - ஹைதராபாத்
இரவு 7.30 மணி
கொல்கத்தா