தமிழ்நாடு காவல்துறையில் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
திருச்செங்கோட்டில் பருத்தி, எள் ஏலம்
திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்திர பருத்தி மற்றும் எள் ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
ஏலத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி அண்டைய மாவட்டங்களிலிருந்தும் 50 மூட்டை பருத்தியை கொண்டு வந்தனா். இதில், பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ. 5520 முதல் ரூ. 7360 வரை விற்பனையானது. மொத்தம் ரூ. 1 லட்சத்துக்கு ஏலம் போனது.
இதே போல, 110 மூட்டை எள் ரூ. 10.93 லட்சத்துக்கு விற்பனையானது. கருப்பு ரகம் கிலோ ரூ. 135.90 முதல் ரூ.173 வரையிலும், சிவப்பு ரகம் ரூ. 97 முதல் ரூ. 142.10 வரையும் ஏல முறையில் விற்பனையானது.