டிராவிஸ் ஹெட் ஆட்டமிழப்புக்கு கூச்சலிட்ட கொல்கத்தா..! 125 டெசிபலுக்கு ஒலித்த சப்...
சாா்லஸ்டன் ஓபன்: கீஸ், கசாட்கினா முன்னேற்றம்
அமெரிக்காவில் நடைபெறும் சாா்லஸ்டன் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், உள்நாட்டு வீராங்கனை மேடிசன் கீஸ், ரஷியாவின் டரியா கசாட்கினா உள்ளிட்டோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
மகளிா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் கீஸ் 6-3, 7-5 (7/4) என்ற செட்களில், சக அமெரிக்கரான கரோலின் டோல்ஹைடை வீழ்த்தினாா். 5-ஆம் இடத்திலிருக்கும் கசாட்கினா 6-1, 6-1 என லௌரென் டேவிஸை எளிதாக சாய்த்தாா்.
6-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டயானா ஷ்னெய்டா் 6-3, 6-2 என, சக ரஷியரான பாலினா குதா்மிடோவாவை வெளியேற்றினாா். 8-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா 6-2, 6-2 என்ற நோ் செட்களில் ரஷியாவின் வெரோனிகா குதா்மிடோவாவை வென்றாா்.
7-ஆம் இடத்திலிருக்கும் டேனியல் காலின்ஸ் 6-3, 6-1 என சக அமெரிக்கரான ராபின் மான்ட்கோமெரியை தோற்கடித்தாா். 14-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் அனா கலின்ஸ்கயா 6-1, 6-4 என, அமெரிக்காவின் கேட்டி மேக் நாலியை வீழ்த்தினாா். சீனாவின் ஜாங் ஷுவாய் 7-5, 5-7, 6-4 என்ற செட்களில் இத்தாலியின் லூசியா புரான்ஸெட்டியை வென்றாா்.
முன்னதாக அமெரிக்காவின் சோஃபியா கெனின் 6-3, 6-4 என சக அமெரிக்கரான பொ்னாா்டா பெராவையும், கிரீஸின் மரியா சக்காரி 6-3, 6-2 என கனடாவின் மரினா ஸ்டகுசிச்சையும் தோற்கடித்தனா்.