செய்திகள் :

மதசார்பற்ற சக்திகளை அணி திரட்ட வேண்டும்: பிரகாஷ் காரத்

post image

மதுரை: மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக அனைத்து மதசார்பற்ற சக்திகளையும் அணி திரட்ட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் வலியுறுத்தினார்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு கட்சிக் கொடியேற்றத்துடன் மதுரையில் தமுக்கம் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது.

இந்த மாநாட்டை கட்சியின் ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் காரத் தொடங்கிவைத்தாா். மாநாட்டில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமையே மதுரைக்கு வந்து பங்கேற்றுள்ளனா்.

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக கட்சிக் கொடியேற்றம் புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் வெண்மணி தியாகிகள் நினைவிடத்திலிருந்து எடுத்து வரப்பட்ட செங்கொடியை கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் உ. வாசுகி அளிக்க, அதை மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் ஏ.கே. பத்மநாபன் பெற்றுக் கொண்டாா்.

இதைத்தொடா்ந்து, மேற்கு வங்க மாநில மூத்த தலைவா் பிமன் பாசு கட்சிக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்வா் பினராயி விஜயன், கட்சியின் ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் காரத், திரிபுரா மாநில முன்னாள் முதல்வா் மாணிக் சா்க்கா், மாநிலச் செயலா் பெ. சண்முகம், மத்தியக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் மற்றும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா்கள், மாநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்று கொடிக்கு மரியாதை செலுத்தினா். மேலும், தியாகிகளை கெளரவிக்கும் விதமாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னா், தமுக்கம் அரங்கில் பொது மாநாடு நடைபெற்றது. இதற்கு திரிபுரா முன்னாள் முதல்வா் மாணிக் சா்க்கா் தலைமை வகித்தாா். கட்சியின் பொதுச் செயலராக இருந்து மறைந்த சீதாராம் யெச்சூரி, கேரள மாநில முன்னாள் செயலா் கொடியேரி பாலகிருஷ்ணன், சுதந்திரப் போராட்ட வீரரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனா் தலைவா்களில் ஒருவருமான என்.சங்கரய்யா ஆகியோா் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் தீா்மானத்தை, அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் பிருந்தா காரத் வாசிக்க தலைவா்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் அஞ்சலி செலுத்தினா்.

இதைத்தொடா்ந்து, மத்தியக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் வரவேற்றுப் பேசினாா். கட்சியின் ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் காரத் பொது மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசினாா்.

அப்போது, அகில இந்திய மாநாட்டின் முக்கியப் பணி அரசியல் உத்திகளை வகுப்பதுதான், பாஜக ஆட்சியில் நாடு பெரும் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. மத்திய பாஜக அரசுக்கு 3 கேள்விகளைை முன்வைக்கிறேன். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நண்பர் என்று கூறுவது யார்?, கௌதம் அதானி, முகேஷ் அம்பானியின் நெருங்கிய நண்பர் யார்?, ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழு விசுவாசி யார்?. இந்த 3 கேள்விகளுக்கும் ஒரே பதில், அது பிரதமர் நரேந்திர மோடி, பாஜக என்பதுதான்.

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாவட்ட சுகாதார மையங்களில் பாராமெடிக்கல் பணிகள்

பிரதமர் மோடியும் அவரது அரசும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமாக இணைந்திருக்கும் இந்துத்துவா-பெரு நிறுவன கூட்டுறவை முன்னிலைப்படுத்துகின்றன. தற்போதைய சூழலில் இந்துத்துவா சக்திகளால் நடைமுறைப்படுத்தப்படும் அரசியல் ஆதிக்கம் என்பது வெறும் தேர்தல் வழிமுறைகளால் மட்டுமல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டின் அனைத்து துறைகளிலும் கருத்தியல், கலாசாரம், சமூகம் மீது இந்துத்துவா சக்திகள் செலுத்தும் செல்வாக்கின் மூலம் பெறப்பட்ட ஆதிக்கம் இது. இதற்கு நேரெதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகள், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், புதிய தாராளமயக் கொள்கைகளின் தாக்குதல்களுக்கு எதிராகவும் பல போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்துத்துவ அமைப்புகளை வீழ்த்த ஆர்எஸ்ஸ், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக அனைத்து மதசார்பற்ற சக்திகளையும் அணி திரட்ட வேண்டும் வலியுறுத்திய காரத், இந்துத்துவ சக்திகளை சமரசமின்றி எதிர்த்துப் போராடுவது இடதுசாரிகள் மட்டுமே.

மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் வகுப்புவாத கொள்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.

நாட்டின் அனைத்துத் துறைகளையும், தனியார்மயமாக்குவது பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பது என பெரும் சீரழிவை மத்தியில் ஆளும் பாஜக மோடி அரசு ஏற்படுத்தி வருகிறது.

மக்களவையில் பெரும்பான்மை இல்லாதபோதிலும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமலாக்க முயற்சிப்பது, மாநிலங்களின் உரிமைகளை பறிப்பது, பாஜக அல்லாத மாநில அரசுகளை மிரட்டுவது, முதல்வர்களை சிறையில் அடைப்பது போன்ற நேரடி செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என குற்றம்சாட்டினார்.

மேலும், பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் அப்பட்டமான பாரபட்சம் காட்டுகிறது. எனவே, மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கைகளை மாநில அரசுகள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.

சுங்க வரி விதிப்பு, எரிப்பொருள்கள், ராணுவத் தளவாடங்கள் கொள்முதலில் நாட்டின் முக்கிய நலன்களை பிரதமர் மோடி விட்டுக் கொடுத்து, அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டார். இதற்கு எதிராக நாடு முழுவதும் உளஅள மக்களைத் திரட்ட வேண்டும் என்றார் அவர்.

சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவின் தென்மேற்கு பகுதிகளின் மீது நேற்று (ஏப்.2) இரவு இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டத... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: பிகார் அரசினால் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பலாமு மாவட்டத்தின் துரிக்தார் மலைப்பகுதியில் மாவோயிஸ்டு அமைப்பின் க... மேலும் பார்க்க

கிரீஸ் அகதிகள் படகு விபத்து: 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவின் அருகில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர். கிரீஸ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள லெஸ்போஸ் தீவை நோக்கி ஏகன் ... மேலும் பார்க்க

இலங்கை: பிரதமர் மோடியின் வருகையால் தெரு நாய்களைப் பிடிக்கும் அரசு! மக்கள் போராட்டம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு இலங்கையிலுள்ள தெரு நாய்களைப் பிடிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக அந்நாட்டு மக்களும் ஆர்வலர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்தியப் பிரதமர் ... மேலும் பார்க்க

பலூசிஸ்தானில் இணைய சேவை முடக்கம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தானில் அரசுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், அம்மாகாணத்தின் தலைநகர் குவேட்டா உள்ளிட்ட முக்கிய நக... மேலும் பார்க்க

ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?

நாட்டில் உள்ள வங்கிகள் 2025 ஏப்ரல் மாதத்தில் 16 நாள்கள் விடுமுறை வருகிறது. இதில் பல்வேறு பண்டிகைகள், உள்ளூர் விழா விடுமுறை மற்றும் பொது விடுமுறை, இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் கட்டாய வாராந்த... மேலும் பார்க்க