மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவ...
ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?
நாட்டில் உள்ள வங்கிகள் 2025 ஏப்ரல் மாதத்தில் 16 நாள்கள் விடுமுறை வருகிறது. இதில் பல்வேறு பண்டிகைகள், உள்ளூர் விழா விடுமுறை மற்றும் பொது விடுமுறை, இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் கட்டாய வாராந்திர விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்களும் அடங்கும்.
நடப்பு நிதியாண்டுக்கான வங்கிக் கணக்குகள் முடிவடைந்ததையொட்டி அனைத்து வங்கிகளுக்கும் ஏப்ரல் 1 ஆம் தேதி (திங்கள்கிழமை) விடுமுறை விடப்பட்டது.
ஏப்ரல் 10 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, 14 ஆம் தமிழ் புத்தாண்டு, 18 ஆம் தேதி புனித வெள்ளி ஆகிய நாள்களும் விடுமுறை நாள்களாகும். அதேபோல், ஏப்ரல் 6, 12, 13, 20, 26, 27 ஆகிய நாட்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வருவதால், அன்றைய நாட்களும் வங்கிகள் திறந்திருக்காது. வங்கிகளுக்கான விடுமுறை இந்திய ரிசர்வ் வங்கியால் (ஆர்பிஐ) தீர்மானிக்கப்படுகின்றன.
வங்கி விடுமுறை நாள்களின் விபரம் :
ஏப்ரல் - 1 (செவ்வாய்க் கிழமை) - நாடு முழுவதும் வங்கிகளின் ஆண்டு கணக்கு நிறைவு
ஏப்ரல் - 5 (சனிக்கிழமை) பாபு ஜெகஜீவன்ராம் பிறந்தநாள் - தெலங்கானாவில் விடுமுறை
ஏப்ரல் - 6 (ஞாயிற்றுக்கிழமை) வாராந்திர வங்கி விடுமுறை
ஏப்ரல் - 10 (வியாழக்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை.
ஏப்ரல் - 12 (சனிக்கிழமை) இரண்டாவது சனிக்கிழமை
ஏப்ரல் - 13 (ஞாயிற்றுக்கிழமை) வாராந்திர வங்கி விடுமுறை
ஏப்ரல் - 14 (திங்கள்கிழமை) அம்பேத்கர் ஜெயந்தி,தமிழ் புத்தாண்டு விடுமுறை. இந்த நாளில் புதுதில்லி, மத்தியப்பிரதேசம், சண்டிகர், மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, சத்தீஸ்கர், மேகாலயா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை. மேலும், விஷு (கேரளம்), தமிழ் புத்தாண்டு(தமிழ்நாடு), பிஹு (அசாம்), பொய்லா போய்ஷாக் (வங்காளம்) போன்ற புத்தாண்டு பண்டிகைகள் இந்த நாளில் கொண்டாடப்படுகின்றன.
ராணுவத்தில் சேர ஏப்.10 வரை விண்ணப்பிக்கலாம்!
ஏப்ரல் - 15 (செவ்வாய்கிழமை) பெங்காலி, பிஹு புத்தாண்டு நாள், ஹிமாச்சல் நாள் விடுமுறை. அகர்தலா, குவாஹாத்தி, இட்டாநகர், மேற்கு வங்கம், சிம்லா அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை.
ஏப்ரல் - 16 (புதன்கிழமை) பிஹு புத்தாண்டு குவாஹாத்தியில் வங்கிகளுக்கு விடுமுறை.
ஏப்ரல் - 18 (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளியை முன்னிட்டு திரிபுரா, அசாம், ராஜஸ்தான், ஜம்மு, ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஸ்ரீநகர் என பல மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை.
ஏப்ரல் - 20 (ஞாயிற்றுக்கிழமை) வாராந்திர விடுமுறை
ஏப்ரல் - 21 (திங்கட்கிழமை) பழங்குடியினரின் பண்டிகையான கரியா பூஜை - அகர்தலாவில் வங்கிகளுக்கு விடுமுறை
ஏப்ரல் - 26 (சனிக்கிழமை) நான்காவது சனிக்கிழமை - வங்கிகளுக்கு விடுமுறை
ஏப்ரல் - 27 (ஞாயிற்றுக்கிழமை) வாராந்திர விடுமுறை
ஏப்ரல் - 29 (செவ்வாய்க்கிழமை) பகவான் ஸ்ரீ பரசுராம் ஜெயந்தி - ஹிமாச்சலப் பிரதேசத்தில் வங்கிகளுக்கு விடுமுறை
ஏப்ரல் - 30 (புதன்கிழமை) பசவ ஜெயந்தி மற்றும் அட்சய திருதியை - கர்நாடகவில் வங்கிகளுக்கு விடுமுறை
குறிப்பாக, நாட்டில் உள்ள பல வங்கிகள் ஆண்டு விடுமுறை நாள்களைக் கடைப்பிடிக்கின்றன, அவற்றில் தேசிய விடுமுறை நாள்கள், மாநிலங்களில் குறிப்பிட்ட பண்டிகைகள் மற்றும் உள்ளூர் விழாக்கள் ஆகியவை அடங்கும்.
அதன்படி, அன்றைய நாள்களில் பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் செயல்படாது. இதனால், பணப் பரிவர்த்தனைகள், காசோலை மற்றும் வரைவோலை பரிவர்த்தனைகளை நேரடியாக மேற்கொள்ள இயலாது.
அதேவேளையில், இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி கணக்குகள் வாயிலாக பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதில் எந்த சிக்கலும் இருக்காது என வங்கிகள் தெரிவித்துள்ளன. அதேபோன்று, பணம் செலுத்தும் இயந்திரங்கள் வாயிலாக டெபாசிட் செய்வதிலும் எந்தப் பிரச்னையும் இருக்காது என்று கூறியுள்ளன.