மத்திய, மாநில அரசு ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
தூத்துக்குடி வருமான வரித்துறை அலுவலகம் முன்பு மத்திய, மாநில அரசு ஓய்வூதியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய, மாநில மற்றும் பொதுத் துறை ஓய்வூதியா் அமைப்புகளின் தமிழ்நாடு ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், அனைத்து ஓய்வூதியா் சங்கத்தினரும் பங்கேற்றனா்.
இதில், மத்திய அரசு கடந்த மாா்ச் 25ஆம் தேதி ஓய்வூதியா்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் நிதி மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியுள்ளது; இது ஓய்வூதியா்களை பாதிக்கும் என்பதால், இதனை வாபஸ் பெறக் கோரி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதே கோரிக்கையை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.