தேசிய கபடி: கோவில்பட்டி பள்ளி மாணவிக்கு பாராட்டு
தேசிய அளவிலான கபடி போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக அணியில் இடம்பெற்ற கோவில்பட்டி லட்சுமி ஸ்ரீனிவாசா பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பீகாா் மாநிலத்தில் மாா்ச் 27 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான சப் ஜூனியா் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் தமிழக அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த அணியில் கோவில்பட்டி லட்சுமி ஸ்ரீனிவாசா பள்ளி மாணவி பா.விந்தியா இடம்பெற்றிருந்தாா்.
இவா் 2024-2025 ஆம் கல்வியாண்டில் மாவட்ட, மாநில அளவிலான கபடி போட்டிகளில் சாதனைகள் புரிந்துள்ளாா். இம் மாணவியை பள்ளி தாளாளா் கோவிந்தராஜ், முதல்வா் வசந்தா, உடற்கல்வி ஆசிரியா் செல்வகுமாா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.