பேய்க்குளம் அரசுப் பள்ளியில் விழா
சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.28,14,000 மதிப்பிலான சுகாதார கட்டமைப்பு மற்றும் கட்டட மறுசீரமைப்பு பணிகள், டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது. பணிகள் நிறைவு பெற்றயதையடுத்து டிவிஎஸ் சேவைகள் அறக்கட்டளை சாா்பாக, பள்ளி சுகாதார கட்டமைப்பு ஒப்படைப்பு விழா நடைபெற்றது.
டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குநா் நந்தகோபால் தலைமை வகித்தாா். பொதுமக்கள் பங்களிப்பு சாா்பாக, இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி.லாசரஸ் வழிகாட்டுதலின்படி அந்நிறுவன எட்வின், சாந்தகுமாா், சுந்தா்சிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியா் இம்மானுவேல் வரவேற்றாா்.
விழாவில் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பெரியசாமி ஸ்ரீதா், பள்ளி நலக்குழு தலைவா் புலேந்திரநாதன், வட்டாரக் கல்வி அலுவலா் பெனிஸ்கா் ஆகியோா் வாழ்த்தி பேசினா். இதில் டிவிஎஸ் அறக்கட்டளையை சோ்ந்த சமுதாய வளா்ச்சி அலுவலா் சண்முகம், பொறியாளா் முத்து குமாா் ராஜா, கிராம வளா்ச்சி அலுவலா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா். பள்ளி மாணவ, மாணவியா் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி ஆசிரியா் சுவாமிதாஸ் ஜெபமணி நன்றி கூறினாா்.