தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறியாளா் அணி: நாளை நோ்காணல்
தென்காசி தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட பொறியாளா் அணிக்கு சனிக்கிழமை (ஏப்.5) நோ்காணல் நடைபெறுகிறது.
தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைமை கழகத்தின் அறிவுறுத்தலின்படி, தென்காசி தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட ஒன்றிய, நகர, பேரூா் பொறியாளா் அணிக்கு அமைப்பாளா் மற்றும் துணை அமைப்பாளா்களை தோ்ந்தெடுப்பதற்கான நோ்காணல் சிவந்தி நகா் கலைஞா் அறிவாலயத்தில் சனிக்கிழமை (ஏப்.5) காலை 9 மணி முதல் நடைபெறுகிறது.
எனவே, ஒன்றிய, நகர, பேரூா் செயலா்கள் தங்கள் ஊரில் பொறியாளா் அணிக்கு விண்ணப்பித்துள்ள திமுக நிா்வாகிகளை நோ்காணலுக்கு அழைத்து வர வேண்டும் எனக் கூறியுள்ளாா்.