செய்திகள் :

கிரீஸ் அகதிகள் படகு விபத்து: 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!

post image

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவின் அருகில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர்.

கிரீஸ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள லெஸ்போஸ் தீவை நோக்கி ஏகன் கடல் வழியாக துருக்கியிலிருந்து இன்று (ஏப்.3) அதிகாலை பயணித்த அகதிகள் படகு ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

இதனைத் தொடர்ந்து, கடலில் உயிருக்கு போராடிய 23 பேரை கிரீஸ் நாட்டின் கடலோரக் காவல் படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், அந்த படகில் பயணித்த அகதிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் தெரிவிக்கப்படாத நிலையில் மாயாமான அகதிகளைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், விபத்து நடந்த ஏகன் கடல் பகுதியில் கிரீஸ் நாட்டின் 3 கடலோரக் காவல் படையின் கப்பல்கள், விமானப் படையின் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த விபத்தில் தற்போது 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அகதிகள் பயணம் செய்த கடல் பகுதியின் வானிலையில் பெரியளவில் எந்தவொரு மாற்றமும் இல்லாததினால், இந்த விபத்துக்கான அடிப்படை காரணம் தெரியவில்லை எனக் கூறப்பட்டிருந்தது.

மேலும், மோதல்கள் மற்றும் வறுமையினால் பாதிப்படைந்த ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஐரேப்பாவினுள் நுழைய படகு மூலமாக கிரீஸ் நாட்டு தீவுகளுக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கிரீஸ் கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து!

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடக்கம்!

மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவானது மிகவும் பிரசிதி பெற்றதாகும். 15 நாள்கள் திருவிழாவான சித்திரை... மேலும் பார்க்க

கேட்பாரின்றி கிடந்த 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: ரயில்வே போலீசார் விசாரணை

சென்னை விம்கோ நகர் ரயில்வே நடைமேடையில் கேட்பாரின்றி கிடந்த 500 கிலோ ரேசன் அரிசி ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.சென்னை விம்கோ நகர் ரயில்வே நடைமேடையில் கொருக்குப்பேட்டை ரயில்... மேலும் பார்க்க

ரயிலிலிருந்து தவறி விழுந்து இளைஞர் பலி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ரயிலில் பயணித்த இளைஞர் வெள்ளிக்கிழமை தவறி விழுந்ததில் பலியானார். கன்னியாகுமரி மாவட்டம், அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி மகன் ஜார்ஜ் நெல்சன... மேலும் பார்க்க

கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 300 கன அடி நீர் திறப்பு அதிகரிப்பு!

திருவள்ளூர்: சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆந்திரத்தின் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் 300 கன அடியாக அதிகரித்துள்ளதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்... மேலும் பார்க்க

பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் மறைவு: பிரதமர் இரங்கல்

மும்பை: ஹிந்தி திரையுலகின் ஜாம்பவானும் பழம்பெரும் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மனோஜ் குமார்(87) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை அதிகாலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது... மேலும் பார்க்க

பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் காலமானார்

மும்பை: ஹிந்தி திரையுலகின் ஜாம்பவானும் பழம்பெரும் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மனோஜ் குமார்(87) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை அதிகாலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.பழம்பெ... மேலும் பார்க்க