அமெரிக்க வரிவிதிப்பு எதிரொலி! இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!
குட் பேட் அக்லி டிரைலர் எப்போது?
குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளைப் பெற்றுள்ளது.
படத்தின் டீசர் மற்றும் ஓஜி சம்பவம், காட் பிளஸ் யூ ஆகிய பாடல்கள் என ஒவ்வொன்றும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் ஏப். 10 ஆம் தேதி வெளியாகும் படத்திற்கு இப்போதே கொண்டாடட்டங்கள் ஆரம்பித்துவிட்டன.
நீண்ட காலம் கழித்து ரசிகர்களுக்கான படத்தில் அஜித் நடித்திருப்பதால் இப்படத்தை முதல்நாள் முதல் காட்சியே பார்க்க பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
உறுதியாக, முதல் நாளில் அதிகம் வசூலித்த தமிழ்ப்படம் என்கிற சாதனையைப் பெறும் என்றே தெரிகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் முன்பதிவு ஏப். 4 ஆம் தேதி துவங்கவுள்ளதால் படத்தின் டிரைலரை நாளை (ஏப். 3) வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: ஜி.வி. பிரகாஷ் விவாகரத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை: காட்டமான திவ்ய பாரதி!