ரூ.14 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!
செங்கல்பட்டு: கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலி!
செங்கல்பட்டு அருகே கார் மீது கனரக லாரி மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள்கோவில் அருகே திருத்தேரி சிக்னலில் நின்ற கார் மீது பின்னால் வந்த கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் ஒரு வயது குழந்தை உள்பட மதுரையைச் சேர்ந்த அய்யனார், கார்த்தி சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்களுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் ஒரு வாரத்தில் திறக்கப்படும்: அமைச்சா் சேகா்பாபு