ஸ்பானிஷ் கோப்பை: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ரியல் மாட்ரிட்!
ரியல் மாட்ரிட் கால்பந்து ஆடவர் அணி ஸ்பானிஷ் கோப்பை அரையிறுதியில் த்ரில் வெற்றி பெற்றது.
கோபா டெல் ரே எனப்படும் ஸ்பானிஷ் கோப்பை அரையிறுதி லெக் 2 போட்டியில் ரியல் மாட்ரிட் அணியும் ரியல் சோசிடாட் அணியும் மோதின.
முதலில் ரியல் சோசிடாட் அணி அபாரமாக விளையாட அடுத்ததாக மீண்டெழுந்த ரியல் மாட்ரிட் 90 நிமிஷங்களில் 4-3 என முடிந்தது.
முதல் லெக்கில் 1-0 என ரியல் மாட்ரிட் முன்னிலை வகிக்கவே மொத்தமாக 4-4 என சமநிலை வகித்தது. அதனால் போட்டி கூடுதல் நேரத்துக்கு சென்றது.
இதில் இரண்டாம் பாதியில் 115ஆவது நிமிஷத்தில் ரியம் மாட்ரிட் அணி வீரர் ரூட்ரிகர் தனது தலையால் ஹெட்டர் அடித்து அசத்தினார்.
5-4 என ரியல் மாட்ரிட் அணி ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மற்றுமொரு அரையிறுதியில் பார்சிலோனாவும் அத்லெடிகோ மாட்ரிட் அணியும் நாளை மோதுகிறது. இறுதிப் போட்டி ஏப்.26ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
HIGHLIGHTS
— Real Madrid C.F. (@realmadriden) April 1, 2025
@RealMadridEn 4-4 @RealSociedadENpic.twitter.com/Qfm94wpn5q