ஐபிஎல் தொடரில் அசத்தும் தமிழன்..! சாய் சுதர்ஷனுக்கு குவியும் பாராட்டுகள்!
தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
சின்னசாமி திடலில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தொடர்ச்சியாக 4ஆவது அரைசதம் அடிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹேசில்வுட் பந்தில் கீப்பருக்கு மேலாக ரேம்ப் ஷாட்டில் ஆட்டமிழந்தார்.
28 இன்னிங்ஸில் 1 முறை மட்டுமே ஒற்றை இலக்க எண்ணில் ஆட்டமிழந்துள்ளார்.
Sai Sudharsan in IPL
— Broken Cricket (@BrokenCricket) April 2, 2025
35, 11, 20, 65*, 14, 22, 62*, 53, 19, 20, 47, 43, 96, 45, 37, 45, 33, 31, 35, 12, 31, 65, 84*, 6, 103, 74, 63, 49
Only 1 Single Digit in 28 Innings #RCBvsGTpic.twitter.com/4v1SY3Eres
மற்ற அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் இவருக்கு இந்தியா முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஐபிஎல் சீசனில் மட்டும் 186 ரன்களை குவித்து அதிக ரன்கள் பட்டியலில் 2ஆம் இடம் பிடித்துள்ளார். 189 ரன்களுடன் நிகோலஸ் பூரன் முதலிடத்தில் இருக்கிறார்.
ஒட்டுமொத்தமாக 28 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1,220 ரன்களை எடுத்துள்ளார். 8 அரைசதங்கள், 1 சதத்துடன் சராசரி 48.8ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sai Sudharsan! pic.twitter.com/06tHpIPwoC
— RVCJ Media (@RVCJ_FB) April 2, 2025
இதனால் வட இந்திய ஊடகங்களிலும் சாய் சுதர்ஷனை “மிஸ்டர் கன்சிஸ்டன்ட்” எனப் புகழ்ந்து வருகிறார்கள்.
தொடக்க கால ஐபிஎல் போட்டிகளில் ஸ்டிரைக் ரேட் பிரச்னை இருந்தது. தற்போது, அதிரடியாகவும் விளையாடுவதால் சாய் சுதர்ஷன் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
No attitude
— Ayyappan (@Ayyappan_1504) April 2, 2025
No Drama
No Justice tags
Just Plays good Cricket , Sai sudharsan for you #RCBvsGTpic.twitter.com/VWHMdVCkOV