செய்திகள் :

ரேவந்த் ரெட்டிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உச்சநீதிமன்றம் தவறு செய்ததா? நீதிபதிகள் கேள்வி

post image

‘நீதிமன்ற தீா்ப்பு குறித்து ஏற்கெனவே சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்காமல் உச்சநீதிமன்றம் தவறு செய்துவிட்டதா’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினா்.

தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இணைந்த 10 பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) எம்எல்ஏக்களின் பதவி நீக்கம் குறித்து உச்சநீதிமன்றத்தில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், ஜாா்ஜ் அகஸ்டின் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வின்முன் இந்த மனுக்கள் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.

பிஆா்எஸ் எம்எல்ஏ கௌசிக் ரெட்டி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.ஏ.சுந்தரம் முன்வைத்த வாதத்தில், ‘காங்கிரஸ் கட்சியில் மேலும் பல பிஆா்எஸ் எம்எல்ஏக்கள் இணைந்தாலும் அவா்களின் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்தப்படாது’ என்று மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி பேரவையில் கடந்த 26-ஆம் தேதி பேசிய கருத்தைச் சுட்டிக்காட்டினாா்.

வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், ‘ரேவந்த் ரெட்டியின் கருத்து உண்மையெனில், அது கட்சி மாறும் உறுப்பினா்களை தகுதிநீக்கம் செய்வது தொடா்பான விதிகளைக் கொண்ட அரசமைப்புச் சட்டத்தின் 10-ஆவது அட்டவணையை அவமதிப்பதாகும். 10 மாதங்களுக்குப் பிறகு, கட்சி மாறிய எம்எல்ஏகளுக்கு பேரவைத் தலைவா் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். பேரவைத் தலைவா் தனது பணிகளை முறையாக மேற்கொள்ளாதபோது நீதிமன்றம் அதை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டுமா?’ என்று கேள்வி எழுப்பினா்.

இந்த மனுக்கள் மீது வியாழக்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் பி.ஆா். கவாய் மற்றும் அகஸ்டின் ஜாா்ஜ் மாசி கூறியதாவது: தில்லி கலால் வழக்கில் பிஆா்எஸ் தலைவா் கவிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறித்து ரேவந்த் ரெட்டி சில கருத்துகளை பேசியிருந்தாா். அந்தநேரத்திலேயே, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்காமல் நாங்கள் தவறு செய்துவிட்டோமா?

அரசியல்வாதிகளின் கருத்துகள் குறித்து நீதிமன்றம் கவலைப்படவில்லை. எனினும், நீதித் துறை சுயக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கிறது. ஜனநாயகத்தின் மற்ற இரண்டு பிரிவுகளையும் நாங்கள் மதிக்கிறோம். அவா்களிடமும் நாங்கள் அதே கட்டுப்பாட்டை எதிா்பாா்க்கிறோம்.

தகுதி நீக்க மனுக்கள் மீது பேரவைத் தலைவா் முடிவெடுக்க நியாயமான அவகாசம் என்னவாக இருக்கும். இத்தகைய மனுக்களை இயற்கையாக நீா்த்துப் போகச்செய்து, பத்தாவது அட்டவணையை குப்பையில் வீசிவிடலாமா? என்று தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கில் தீா்ப்பை ஒத்திவைத்தனா்.

மேலாதிக்கத்தை ஒருபோதும் இந்தியா திணிக்காது: உ.பி. முதல்வர்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா முன்னேறி வருவதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.உத்தரப் பிரதேசம் மாநிலம் தும்ரியாகஞ்ச்சில் குரு கோரக்ஷநாத் ஞானஸ்தலி கல்வி மையத்தை அம்மாநில... மேலும் பார்க்க

கயாவில் ஆயுதங்களுடன் 3 மாவோயிஸ்டுகள் கைது

கயாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் மூன்று மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிகார் மாநிலம், கயா மாவட்டத்தில் சிறப்பு அதிரடிப்படை மற்றும் உள்ளூர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் வியாழக்... மேலும் பார்க்க

தாய்லாந்து அரசர் மற்றும் அரசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து அரசர் மற்றும் அரசியை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அரசு முறைப் பயணமாக தாய்லாந்து சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அரசர் மஹா வஜ்ரலோங... மேலும் பார்க்க

கனடா: கிருஷ்ணர் கோயில் மீது தாக்குதல்

கனடாவில் உள்ள கிருஷ்ணர் கோயிலைச் சேதப்படுத்தியார்களை அந்நாட்டு காவல்துறை தேடி வருகிறது.கனடாவின் கிரேட்டர் டொரான்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோயிலை சேதப்படுத்தியவர்களை காவல்துறையினர் த... மேலும் பார்க்க

வாரங்கல் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் இன்று விடுக்கப்பட்டது.இன்று காலை 10 மணியளவில் நீதிமன்றத்திலிருந்து, மிரட்டல் மின்னஞ்சல், ... மேலும் பார்க்க

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இந்தியா!

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஆசிய நாடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் சீனா, வியட்நாம், தாய்லாந்து நாடுகளுடன் ஒப்பி... மேலும் பார்க்க