மணிப்பூரை தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி!
மத்திய அரசு மணிப்பூரைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தாய்லாந்து பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நிகழவுள்ள 6-ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். இந்த நிலையில், விமானப் பயணம் மீண்டும் அடிக்கடி பறக்கிறது, இந்தமுறை பாங்காக் நோக்கி.. என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேலி செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
கிழக்கு நோக்கிப் பாருங்கள், ஆனால் மணிப்பூரை ஏன் தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும்?
மக்களவையில் நள்ளிரவு 2 மணிக்குக், குடியரசுத் தலைவரின் அதிகாரத்தின் மீது புல்டோசர் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது ஏன்? வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்துக்கு மட்டும் ஒரே ஒரு மணி நேரம் ஒதுக்கிவிட்டு, அதுகுறித்த உள்துறை அமைச்சர் பொய்யான தகவல்களையும், திரித்த செய்திகளையும் சொல்வதற்கு போதுமான நேரம் ஒதுக்கப்பட்டிருப்பது, ஏற்கனவே அடைந்த காயத்தை அவமதிப்பதாக உள்ளது.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் சட்டப்பூர்வ தீர்மானம் மக்களவையில் வியாழக்கிழமை அதிகாலை நிறைவேற்றப்பட்டதை அடுத்து ரமேஷின் கருத்துக்கள் வெளியாகியுள்ளது.
விவாதத்திற்குப் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பதற்றமான வடகிழக்கு மாநிலத்தில் இயல்புநிலையை மீட்டெடுக்க மத்திய அரசு அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களாக மணிப்பூரில் எந்த வன்முறையும் இல்லை என்றும், அமைதியான தீர்வுக்காக மெய்தி மற்றும் குகி சமூகங்கத்தினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், பொதுவாக சூழ்நிலை அமைதியாக உள்ளது. ஆனால் மக்கள் முகாம்களில் இருக்கும் வரை, நிலைமை சீரடைந்தது என்று கூற இயலாது. மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க அரசு அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், எங்கள் தரப்பில் எந்த தாமதமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
மணிப்பூரில் இதற்கு முன்னதாகவும் நாகா குகி சமூகத்தினரிடையே மோதல் நடைபெற்றதாகவும், அந்த வன்முறையில் 750 பேர் கொல்லப்பட்டனர். இது ஒன்றும் புதியதல்ல. ஆனால் அப்போதைய பிரதமரோ, உள்துறை அமைச்சரோ மணிப்பூருக்கு வரவில்லை. பாஜக ஆட்சியின் போது மட்டுமே வன்முறை வெடித்தது என்ற எண்ணம் இருப்பதாகவும் உள்துறை அமைச்சர் கூறினார், இது சரியல்ல.
முன்னதாக, விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சசி தரூர், தனது கட்சி இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதாகவும், ஆனால் மாநிலத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.