Health: உங்க சாப்பாட்டில் தேவையான புரோட்டீன் இருக்கா? யாருக்கு எவ்வளவு புரதச்சத்...
துருவ நட்சத்திரம் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறேன்: விக்ரம்
நடிகர் விக்ரம் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி, 8 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகாமல் இருக்கும் படம் துருவ நட்சத்திரம். ஆக்சன், திரில்லர் பாணியில் உருவான இப்படம், தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட நிதி பிரச்னையால் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது.
இந்த நிலையில், வீர தீர சூரன் திரையரங்க விசிட்டின் போது ரசிகர்கள் துருவ நட்சத்திரம் படத்திற்காகக் காத்திருப்பதாக நடிகர் விக்ரமிடம் சொன்னபோது, ‘நானும்தான்’ என பதிலளித்திருக்கிறார்.
மேலும், படம் எப்போது வெளியாகும் எனக் கேட்டதற்கு, ‘கௌதம் மேனனிடம் கேட்டுச் சொல்கிறேன்’ என விக்ரம் கூறியுள்ளார்.
பார்த்திபன், விநாயகன், சிம்ரன், ராதிகா, ரிது வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தை இந்தாண்டு மே மாதம் திரைக்குக் கொண்டு வர கௌதம் மேனன் திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிக்க: பெருசு ஓடிடியில் எப்போது?