செய்திகள் :

மேற்கு வங்கம்: மம்தா பானர்ஜி நியமித்த 25,000 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

post image

ஆசிரியர் நியமனத் தேர்வு

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசு 2016ம் ஆண்டு பள்ளிகளில் 25 ஆயிரம் ஆசிரியர்களைத் தேர்வு நடத்தித் தேர்ந்தெடுத்து பணியில் நியமித்தது.

ஆசிரியர் நியமனத் தேர்வுக்காக நடத்தப்பட்ட தேர்வில் 23 லட்சம் பேர் பங்கேற்றனர். பணியிடங்கள் மொத்தம் 24,640 என்ற எண்ணிக்கையிலிருந்தது.

ஆனால், 25753 பேருக்குப் பணி ஆர்டர் உத்தரவுகள் வழங்கப்பட்டன. தரப்பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கும் பணி நியமன உத்தரவு கடிதம் கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து ஆசிரியர் நியமனத்தில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாகக் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பார்த்தா சாட்டர்ஜி

உயர் நீதிமன்றம் உத்தரவு

அம்மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் இம்முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டது. அதோடு 25 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

அமலாக்கப் பிரிவும் இம்முறைகேடு குறித்து விசாரித்தது. இதைத்தொடர்ந்து மம்தா பானர்ஜி அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி உட்படப் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

கொல்கத்தா உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மம்தா பானர்ஜி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இம்மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், உயர் நீதிமன்ற தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்து உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தனர்.

ஒட்டுமொத்த ஆசிரியர் தேர்வில் மோசடி நடந்துள்ளது. ஆசிரியர் தேர்வு நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாநில அரசு அடுத்த 3 மாதத்திற்குள் புதிதாகத் தேர்வு நடத்தி ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும், அதில் தேர்ச்சி அடையும் 2016ல் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் இது வரை வாங்கிய சம்பளத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தேர்ச்சி பெறாதவர்கள் இதுவரை வாங்கிய சம்பளத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மம்தா பானர்ஜி

மாற்றுத்திறனாளிகள் மட்டும்

2016ம் ஆண்டு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மட்டும் பணியில் தொடரலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் 25,000 ஆசிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மம்தா பானர்ஜி அரசை நசுக்கி இருப்பதாகவும், லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை மம்தா பானர்ஜி அரசு சீரழித்து இருப்பதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`கூட்டாட்சி தத்துவத்தின்மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் தாக்குதல்...' - பிரகாஷ் காரத்

``தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மூலம் 2026 க்கு பிறகு தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பெரும் சமநிலையின்மை ஏற்படும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் கா... மேலும் பார்க்க

`மாநில அரசு, மத்திய அரசின் விளம்பர தூதர்கள்போல செயல்பட இயலாது' - மதுரையில் பினராயி விஜயன் பேச்சு

"கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை அதிகரித்து வருவது மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.." என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியுள்ளார்.மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன்மதுரையில... மேலும் பார்க்க

PM MODI : CHINA -க்கு எழுதிய கடிதத்தை மறைத்தாரா? | Rahul Stalin Waqf Bill | Imperfect Show 3.4.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், * வக்ஃப் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!* ஊழலை வேடிக்கை பார்க்க முடியாது! - ரவிசங்கர் பிரசாத்* வக்ஃப் மசோதாவைக் கிழித்தெறிந்த அசாசுதீன் ஓவைசி!* "எப்படியாவது இந்துக்கள் - ... மேலும் பார்க்க

TVK : 'இந்திய அரசியலமைப்பின் மீதான களங்கம்!' - வக்ஃபு திருத்த மசோதாவுக்கு விஜய் எதிர்ப்பு!

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கும் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.Vijayஜனநாயகத்திற்கு எதிரான வக்ஃபு சட்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ஸ்மார்ட் சிட்டி பணியில் முறைகேடு, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ - சாடும் அதிமுக

புதுச்சேரி அதிமுக-வின் மாநிலச் செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``புதுச்சேரியில் மத்திய அரசின் 50% சதவிகித நிதிப் பங்களிப்புடன் கூடிய ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணி, கடந்த காங்கிரஸ் ஆட்சி... மேலும் பார்க்க