டிராவிஸ் ஹெட் ஆட்டமிழப்புக்கு கூச்சலிட்ட கொல்கத்தா..! 125 டெசிபலுக்கு ஒலித்த சப்...
புதுச்சேரி: `ஸ்மார்ட் சிட்டி பணியில் முறைகேடு, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ - சாடும் அதிமுக
புதுச்சேரி அதிமுக-வின் மாநிலச் செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``புதுச்சேரியில் மத்திய அரசின் 50% சதவிகித நிதிப் பங்களிப்புடன் கூடிய ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணி, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முடக்கப்பட்டது. தற்போதைய ஆட்சியில் ரூ.670 கோடி மதிப்பீட்டில் 89 திட்டங்களை செயல்படுத்த பல்வேறு துறைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் எந்தப் பணியும் துவக்கப்படாமல் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. தற்போது அரவிந்தர் வீதி முதல் திப்புராயப்பேட்டை கழிவு நீர் வாய்க்காலை மேம்படுத்துவதற்காக, நல்ல நிலையில் இருக்கும் 11 பாலங்கள் இடிக்கப்பட்டு புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இதற்கு ரூ.16 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல நகரப்பகுதிகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்துவதற்காக ரூ.100 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டிருக்கிறது. குமரகுருபள்ளம் அடுக்குமாடி குடியிருப்பு, அண்ணா திடல், புதிய பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையம், பள்ளவாய்க்கால் போன்ற பணிகள் முடிவுற்றிருக்கின்றன. அந்தப் பணிகளுக்கான செலவு விபரம் குறித்த விரிவான விசாரணைக்கு ஆளுநரும் முதல்வரும் உத்தரவிட வேண்டும்” என்றார்.