`தொகையை வசூலிக்காத BSNL; Jio-வால் மத்திய அரசுக்கு ரூ.1,757 கோடி நஷ்டம்’ - ஷாக் கொடுக்கும் சிஏஜி
முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ.1,757.56 கோடி நஷ்டம் என்று சி.ஏ.ஜி (தலைமைக் கணக்குத் தணிக்கை) அறிக்கை கூறியுள்ளது.
காரணம் என்ன?
மத்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் மற்றும் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்திற்கும் இடையே கட்டமைப்பு பகிர்வுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
டெலிகாம் உள்கட்டமைப்பு வழங்குநர்களுக்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம் மற்றும் ஜியோ நிறுவனம் லைசன்ஸ் தொகையை கட்ட வேண்டும். இது இரு நிறுவனங்களுக்கும் சேர்ந்து வரும் வருமானத்தில் கட்டப்படும்.

ரூ.36.38 கோடி நஷ்டம்
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக, ஜியோ நிறுவனத்தின் பங்கை தனியாக கழிக்காமல், அதனையும் பி.எஸ்.என்.எல் சேர்த்து கட்டியிருக்கிறது. இதனால், பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு ரூ.38.36 கோடி நஷ்டம்.
ரூ.1,757.76 கோடி நஷ்டம்
மாஸ்டர் சர்வீஸ் ஒப்பந்தத்தின் (MSA) படி, இரு நிறுவனங்களும் இணைந்து பயன்படுத்தும் கூடுதல் தொழில்நுட்பங்களுக்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடந்த மே 2014-ம் ஆண்டு முதல் மார்ச், 2024-ம் வரை கட்டணம் வசூலிக்கவில்லை. இதனால், மத்திய அரசுக்கு ரூ.1,757.76 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பி.எஸ்.என்.எல்லின் வேறு சில கட்டமைப்புகளிலும் ஷார்ட் பில்லிங் நடந்துள்ளது. அதாவது, பில் தொகையை விட, குறைவான கட்டணத்தை கட்டுவது. எம்.எஸ்.ஏ ஒப்பந்தத்தை செயல்படுத்ததால் கூடுதலாக ரூ.29 கோடி பி.எஸ்.என்.எல்லுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.