செய்திகள் :

கட்டணமில்லா சிகிச்சைக்கு அரசு காப்பீடு பெற விண்ணப்பிப்பது எப்படி?

post image

குறைந்த வருவானம் பெறும் மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளைக் கட்டமில்லாமல் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு 2009 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி தமிழக அரசு தொடங்கிய திட்டம் முதல்வர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டமும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் 2018 செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது இந்த திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ஏறத்தாழ 2 கோடி குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றன.

யாரெல்லாம் பயன்பெற முடியும்?

இந்தத் திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 1,513 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகளும், 52 தோல் நோய் பரிசோதனைகளும் அதனுடன் தொடர்புடைய 11 தொடர் சிகிச்சைகளும் 8 உயர் அறுவை சிகிச்சைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சிகிச்சைக்கான மருத்துவப் பட்டியல் www.cmchistn.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்துகொள்ளலாம்..

எங்கெல்லாம் சிகிச்சை பெற முடியும்?

இந்த திட்டத்தில் வரைமுறைப்படுத்தப்பட்ட சிகிச்சைகள் அனைத்தும் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் அனைத்திலும் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது 854 அரசு மருத்துவமனைகள், 975-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் என1830-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

பயன்கள் என்ன?

கட்டணமில்லா சிகிச்சை திட்டத்தின் மூலம், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை பெறலாம். அதாவது ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கும் குறைவாக உள்ள அனைத்து குடும்பங்களும் பயன்பெறலாம். விதவைகள், ஆதரவற்றவர்கள், முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் மற்றும் முகாம்களுக்கு வெளியே வசிக்கும் பதிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை.

தகுதிகள் என்ன?

அரசு காப்பீட்டுத் திட்டத்தில் இணைய விண்ணப்பிப்போர் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். விண்ணப்பத்தாரரின் சட்டப்பூர்வமான மனைவி அல்லது கணவர், இவரது குழந்தைகள், இவர்களைச் சார்ந்த பெற்றோர் ஆகியோர் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற முடியும். இவர்களது பெயர்கள் குடும்ப அட்டையில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட உறுப்பினர் விண்ணப்பப் படிவத்தில் ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு கீழ் உள்ளது என்பதை கிராம நிர்வாக அலுவர் மூலமாக பூர்த்தி செய்து கையொப்பம் பெற்றிருக்க வேண்டும். இந்த சான்றிதழுடன் குடும்ப அட்டை, குடும்ப உறுப்பினர்கள் அனைவரது ஆதார் அட்டைகளின் நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். இவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கும் மையத்தில் அளித்து மருத்துவக் காப்பீட்டு அட்டையை(ஸ்மார்ட் கார்டு) பெற்றுக் கொள்ளலாம். அப்போது, குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளின் அசல் கையில் வைத்திருக்க வேண்டும்.

கட்டணமில்லா தொலைப்பேசி

இந்த திட்டம் குறித்த விவரங்களை அறிவதற்கும், குறைகளைத் தெரிவிப்பதற்கும் 24 மணிநேரம் தொடர்ந்து செயல்படும் கட்டணமில்லா அழைப்பு மைய தொலைப்போசி எண் 1800 425 3993 இல் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

மேலும் விரிவான விரங்களுக்கு www.cmchistn.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

அமெரிக்காவின் பரஸ்பர வரி: நாட்டின் பொருளாதாரம் என்னவாகும்?

உலக நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது விதிக்கப்படும் பரஸ்பர வரி தொடர்பான அறிவிப்பை அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட்டார்.அமெரிக்க பொருள்... மேலும் பார்க்க

யுபிஐ மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.2,000-தான் பரிமாற்றம் செய்ய முடியுமா? இல்லை!

யுபிஐ மூலம் ஒரு நாளைக்கு ரூ.2,000 தான் பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்பது போன்ற தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், உண்மையில் யுபிஐ-யின் விபிஏ என்ற மெய்நிகர் கட்டண முகவரி மூலம் பணத்தைப் பெறுவதற்குத்தான்... மேலும் பார்க்க

சிப்காட் தொழில்பேட்டை: சுற்றுச்சூழலை காக்க கவனம் கொள்ளுமா அரசு?

கே.பி. அம்பிகாபதி வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே தென்னடாா் கிராமத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு இயற்கை ஆா்வலா்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண... மேலும் பார்க்க

இந்திய அரசுக்குத் தலைவலியாகும் மஸ்க்கின் குரோக் ஏஐ!

எக்ஸ் நிறுவனத்தின் குரோக் ஏஐ (Grok AI) பிரதமர் மோடிக்கு எதிராக வெளியிடும் கருத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தகவலைப் பெற வேண்டும் என்றால்... மேலும் பார்க்க

இன்று உலக சிட்டுக்குருவி நாள்: இந்த சின்னஞ்சிறு இனம் அழியக் காரணம்?

கடந்த சில பத்தாண்டுகளில், உலகம் முழுவதும் பல்லுயிர்ப் பெருக்க சமநிலைக்கு அடிப்படைக் காரணமாக இருந்துவரும் சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை மிகக் கடுமையாகக் குறைந்து வருவதற்கு எண்ணற்றக் காரணங்களை மனிதன்தா... மேலும் பார்க்க

செல்போனில் கூகுள் பே, போன் பே இருக்கிறதா? கவனம்! ஏப். 1 முதல் புதிய விதிமுறை!!

ஒருவர் பயன்படுத்தும் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்ஃபோன் எண் ஏதேனும் ஒரு காரணத்தால் செயல்படாமல் போயிருந்தால், அந்த வங்கிக் கணக்கோ அல்லது அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் கூகுள் பே, போன் பே-... மேலும் பார்க்க