செய்திகள் :

யுபிஐ மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.2,000-தான் பரிமாற்றம் செய்ய முடியுமா? இல்லை!

post image

யுபிஐ மூலம் ஒரு நாளைக்கு ரூ.2,000 தான் பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்பது போன்ற தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், உண்மையில் யுபிஐ-யின் விபிஏ என்ற மெய்நிகர் கட்டண முகவரி மூலம் பணத்தைப் பெறுவதற்குத்தான் இந்த வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதாவது விபிஏ (Virtual Payment Address- VPA) மூலம் ஒருநாளைக்கு அதிகபட்சமாக ரூ.2,000 மட்டுமே பணப்பரிமாற்றம் அல்லது ஒருவரிடம் கோரி பெற முடியும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த பணப்பரிமாற்ற இலக்கு காரணமாக, யுபிஐ மூலம் பணப்பரிமாற்றம் செய்ய முடியாதோ, கட்டணம் வசூலிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அது உண்மையில்லை.

மாறாக, ஒரு வங்கிக் கணக்கின் விபிஏ எனப்படும் மெய்நிகர் பணம் செலுத்தும் முகவரி மூலமாக பணப் பரிமாற்றத்துக்குத்தான் இந்த விதிமுறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபிஏ முறையில் பணப்பரிமாற்றம்

ஒருவரது வங்கிக் கணக்குக்கு யுபிஐ வசதி ஏற்படுத்தப்படும்போது, அதற்கான அடையாள முகவரியும் சேர்ந்தே உருவாக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு யுபிஐ ஐடிக்கும், ஒரு விபிஏ (VPA) உருவாக்கப்படுகிறது. இதனை மெய்நிகர் கட்டண முகவரி (VPA) என்கிறார்கள். இதுதான் ஒரு வங்கிக் கணக்கின் யுபிஐ ஐடியாக இருக்கும். இந்த விபிஏ என்பது ஒருவரது பெயர் அல்லது செல்போன் எண் மற்றும் அட் சிம்பள் (@), வங்கிப் பெயர் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். கிட்டத்தட்ட ஒரு மின்னஞ்சலைப் போல இருக்கும்.

இந்த விபிஏ முகவரியைக் கொண்டு பணப்பரிமாற்றம் செய்யலாம். ஒருவர் உங்களுக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்றால், வங்கிக் கணக்கு எண் அல்லது உங்கள் தொலைபேசி எண்களைவிடவும், இந்த விபிஏ ஐடியைக் கேட்டு எளிதாக பணம் அனுப்பலாம். இதனால், வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்ப வேண்டிய அவசியமில்லாமல் போகிறது.

இந்த விபிஏ மூலம் பணப் பரிமாற்றம் செய்ய வங்கிக்கு வங்கி பல்வேறு வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில்தான், ஒருவர், விபிஏ ஐடியைப் பயன்படுத்தி, மற்றொருவரிடமிருந்து ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.2,000 மட்டுமே கோரிப் பெற முடியும் என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல, இந்த முறையில், ஒரு சிறு வியாபாரி, ஒரு நாளைக்கு ரூ.2,000 மட்டுமே பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கும் நாம் யுபிஐ மூலம் பணப்பரிமாற்றம் செய்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒருவர் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரையில் யுபிஐ மூலம் பணப்பரிமாற்றம் செய்யலாம். இது வங்கிக்கு வங்கி மாறுபடலாம். அதுபோல, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20 பணப்பரிமாற்றங்களை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைமுறைக்கு வந்த புதிய விதிமுறை!

என்பிசிஐ எனப்படும் தேசிய பணப்பரிமாற்ற கார்ப்பரேஷன் இந்தியா வெளியிட்டிருக்கும் புதிய விதிமுறை இன்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது. எனவே, உங்கள் செல்போனில் இருக்கும் கூகுள் பே, போன் பே செயல்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

அதாவது, பல ஆண்டுகளுக்கு முன்பு, வங்கிக் கணக்குத் தொடங்கும் போது கொடுத்த செல்போன் எண்ணை தற்போது ஒருவர் பயன்படுத்தாமல் இருக்கலாம். அந்த செல்போன் எண் செயலற்று வேறு ஒருவரின் பயன்பாட்டுக்கும் வழங்கப்பட்டிருக்கலாம்.

இதனால், அந்த வங்கிக் கணக்கே முடக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. ஒருவேளை அவ்வாறு உங்கள் பணப்பரிமாற்ற செயலி பயனற்றுப் போயிருந்தால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. உடனடியாக தங்களது வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண்கள் என்ன என்பதை உறுதி செய்துகொண்டு, அது பழைய எண்ணாக இருந்தால், உடனடியாக வங்கிக்குச் சென்று பழைய எண்ணை மாற்றிவிட்டு தற்போது பயன்படுத்தும் புதிய எண்ணைக் கொடுத்துவிட்டால் போதும், வங்கிக் கணக்கும் பணப்பரிமாற்ற செயலிகளும் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.

புதிய விதிமுறை என்ன?

வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண் பயன்பாட்டில் இல்லாமலோ அல்லது அந்த எண் 90 நாள்களுக்கும் மேல் செயல்பாட்டில் இல்லாமல் இருந்து அது தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மூலம், புதிய செல்போன் பயனர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டிருந்தாலோ, அந்த எண் இணைக்கப்பட்டிருந்த வங்கிக் கணக்கை முடக்கி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், நிதி மோசடி அல்லது தவறான வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்புதல் போன்ற சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

ஒருவர் தான் எத்தனை வங்கிக் கணக்கு பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், அவற்றுடன் என்னென்ன எண்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவை பயன்பாட்டில் உள்ளதா? என்பதை அறிந்துகொண்டு, அவ்வாறு ஏதேனும் பழைய எண் இணைக்கப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கை பயன்படுத்திக் கொண்டிருந்தால் உடனடியாக அந்த வங்கிக் கிளைக்குச் சென்று புதிய எண்ணை அப்டேட் செய்ய வேண்டும்.

இந்த புதிய விதிமுறை ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டதால், பணப்பரிமாற்ற செயலிகள் செயல்படுகிறதா என்பதை உறுதி செய்துகொண்டு, செயல்படவில்லை என்றால், வங்கிக் கிளையை அணுகவும்.

இதையும் படிக்க.. என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

கட்டணமில்லா சிகிச்சைக்கு அரசு காப்பீடு பெற விண்ணப்பிப்பது எப்படி?

குறைந்த வருவானம் பெறும் மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளைக் கட்டமில்லாமல் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு 2009 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி தமிழக அரசு தொடங... மேலும் பார்க்க

சிப்காட் தொழில்பேட்டை: சுற்றுச்சூழலை காக்க கவனம் கொள்ளுமா அரசு?

கே.பி. அம்பிகாபதி வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே தென்னடாா் கிராமத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு இயற்கை ஆா்வலா்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண... மேலும் பார்க்க

இந்திய அரசுக்குத் தலைவலியாகும் மஸ்க்கின் குரோக் ஏஐ!

எக்ஸ் நிறுவனத்தின் குரோக் ஏஐ (Grok AI) பிரதமர் மோடிக்கு எதிராக வெளியிடும் கருத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தகவலைப் பெற வேண்டும் என்றால்... மேலும் பார்க்க

இன்று உலக சிட்டுக்குருவி நாள்: இந்த சின்னஞ்சிறு இனம் அழியக் காரணம்?

கடந்த சில பத்தாண்டுகளில், உலகம் முழுவதும் பல்லுயிர்ப் பெருக்க சமநிலைக்கு அடிப்படைக் காரணமாக இருந்துவரும் சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை மிகக் கடுமையாகக் குறைந்து வருவதற்கு எண்ணற்றக் காரணங்களை மனிதன்தா... மேலும் பார்க்க

செல்போனில் கூகுள் பே, போன் பே இருக்கிறதா? கவனம்! ஏப். 1 முதல் புதிய விதிமுறை!!

ஒருவர் பயன்படுத்தும் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்ஃபோன் எண் ஏதேனும் ஒரு காரணத்தால் செயல்படாமல் போயிருந்தால், அந்த வங்கிக் கணக்கோ அல்லது அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் கூகுள் பே, போன் பே-... மேலும் பார்க்க

ஹூதிக்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது ஏன்?

யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சிப் படை மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த இரு நாள்களாக நடத்தப்பட்ட தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்த... மேலும் பார்க்க