தமிழ்நாடு காவல்துறையில் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
ஜப்பானில் நிலநடுக்கம்...!
ஜப்பான் நாட்டில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் மூன்றாவது மிகப் பெரிய தீவான கியூஷூவில், இன்று (ஏப்.2) இரவு 7.34 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலப்பரப்பிலிருந்து சுமார் 30 கி.மீ. ஆழத்தில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு கண்கானிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வானது கியூஷு தீவு முழுவதும் உணரப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் இதனால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பொருள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்த எந்தவொரு தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.
EQ of M: 6.0, On: 02/04/2025 19:34:00 IST, Lat: 31.09 N, Long: 131.47 E, Depth: 30 Km, Location: Kyushu, Japan.
— National Center for Seismology (@NCS_Earthquake) April 2, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjcVGs@DrJitendraSingh@OfficeOfDrJS@Ravi_MoES@Dr_Mishra1966@ndmaindiapic.twitter.com/FmxYcrJlHW
முன்னதாக, தீவு நாடான ஜப்பான் அமைந்துள்ள பசிபிக் பெருங்கடல் பகுதியில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் மெகா நிலநடுக்கம் ஏற்பட்டால் மிகப்பெரியளவிலான சுனாமி ஏற்பட்டு சுமார் 3 லட்சம் மக்கள் பலியாகும் அபாயமுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்திருந்தது.
மேலும், இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி 3,000-க்கும் அதிகமானோர் பலியானோர் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 3 மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம்! ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்பு!