செய்திகள் :

நானியின் ஹிட் 3: முதல் பாடல்!

post image

நானி நடிப்பில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

நானியின் முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து வெளியான தசரா, ஹாய் நான்னா கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

இறுதியாக வெளியான ‘சரிபோத சனிவாரம்’ (சூர்யாவின் சனிக்கிழமை) திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நானி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, நானி ஹிட் - 3 திரைப்படத்தில் நடித்து முடித்தார். வால் போஸ்டர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை சைலேஷ் கொலனு இயக்கியுள்ளார்.

இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் பெரிய ஹிட் அடித்ததைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் தயாராகியுள்ளது.

இந்நிலையில் மிக்கி ஜே மேஜர் இசையில் தமிழில் கார்த்தி குரலில் முதல் பாடலான ’காதல் வெல்லுமா’ வெளியாகியுள்ளது.

வேட்டுவம் கதாநாயகி இவரா?

வேட்டுவம் திரைப்படத்தின் கதாநாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. இரஞ்சித் நடிகர் ஆர்யாவை நாயகனாக வைத்து சர்பட்டா - 2 திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார... மேலும் பார்க்க

பஞ்சாயத்து 4-ஆவது சீசன் ரிலீஸ் தேதி!

பஞ்சாயத்து இணையத்தொடரின் 4ஆவது சீசனின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான பஞ்சாயத்து எனும் இணையத் தொடர் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. டிவிஎஃப் தயாரித்த இந்தத் தொடரினை தீபக் ... மேலும் பார்க்க

நிறைவடைகிறது நீ நான் காதல் தொடர்!

நீ நான் காதல் தொடர் நிறைவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.ஸ்டார் மா தொலைக்காட்சியின் பிரபல தொடரான 'நுவ்வு நேனு பிரேமா' என்ற தொடரின் மறு உருவாக்கமாக 'நீ நான் காதல்' தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.விஜய... மேலும் பார்க்க

முட்டையைக்கூட வேக வைக்கத் தெரியாது: கரீனா கபூர்

நடிகை கரீனா கபூர் தனக்கு சமைக்கவே தெரியாது என்றும் முட்டையைக் கூட வேக வைக்கத் தெரியாது எனக் கூறியுள்ளார். ஹிந்தியில் 2000ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார் கரீனா கபூர். பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள... மேலும் பார்க்க

ஜாலியன் வாலாபாக் படுகொலை வழக்கு படத்தின் டிரைலர்!

அக்‌ஷய் குமார், மாதவன் நடிப்பில் உருவான கேசரி - 2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அனுராக் சிங் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்த கேசரி திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப்படமானது. பிரிட... மேலும் பார்க்க

ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை!

ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை ரெடின் கிங்ஸ்லியின் மனைவியும் சின்ன திரை நடிகையுமான சங்கீதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.ஆனந்த ராகம் தொடரில் ப... மேலும் பார்க்க