சிஎஸ்கே அணியில் விளையாட 17 வயது மும்பை வீரருக்கு அழைப்பு!
சிஎஸ்கே அணியில் விளையாட 17 வயது மும்பை தொடக்க ஆட்டக்காரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் சுமாரான ஆண்டாகவே இருக்கிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது.
மிடில் ஆர்டர் பிரச்சினையால் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ள சென்னை அணி மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் நோக்கில் அவரை சோதனை செய்து பார்க்க மும்பையைச் சேர்ந்த 17 வயதான ஆயுஷ் மாத்ரேவுக்கு அழைப்பு விடுத்துக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜெட்டா நகரில் நவம்பரில் நடைபெற்ற மெகா ஏலத்தில் மாத்ரேவை யாரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.
இதுபற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக செயல் இயக்குநர் காசி விஸ்வநாதன் கூறுகையில், “மாத்ரேவை ஒரு சோதனைக்காக அழைத்திருக்கிறோம். அவரது திறமை எங்கள் அணி நிர்வாகத்தை ஆச்சரியமடைய வைத்திருக்கிறது. எங்கள் அணியில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சோதனைக்காக மட்டுமே அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அணிக்குத் தேவைப்பட்டால் அவரை அணியில் பயன்படுத்துவோம்” என்றார்.
இதையும் படிக்க: சச்சின் பதிவை 1,000 முறை படித்த ஷஷாங் சிங்..! இன்ஸ்டா பயன்பாட்டினை குறைக்க அறிவுறுத்திய கேப்டன்!
ரஞ்சி தொடரில் 8 போட்டிகளில் ஒரு இரட்டைசதத்துடன் 471 ரன்களும், விஜய் ஹசாரே தொடரில் சௌராஷ்டிர அணிக்கு எதிராக சதம் விளாசியதுடன் மொத்தமாக 7 போட்டிகளில் விளையாடி 458 ரன்கள் குவித்திருந்தார்.
மாத்ரே மும்பை அணிக்காக டி20 தொடர்களில் இதுவரை அறிமுகமாகவில்லை. இருந்தாலும் சென்னை அணியில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் நாகலாந்துக்கு எதிரான போட்டியில் 181 ரன்கள் விளாசி ஜெய்ஸ்வாலின் சாதனையை முறியடித்திருந்தார்.
இதையும் படிக்க: கோப்பையை வெல்வது மட்டும் மீதமிருக்கிறது: நிதீஷ் குமார் ரெட்டி
1⃣8⃣1⃣ runs | 1⃣1⃣7⃣ balls | 1⃣1⃣ sixes | 1⃣5⃣ fours
— BCCI Domestic (@BCCIdomestic) January 1, 2025
Watch snippets of Mumbai's Ayush Mhatre's record-breaking knock of 181 against Nagaland in the #VijayHazareTrophy in Ahmedabad, making him the youngest player to score 150-plus in men's List A cricket @IDFCFIRSTBankpic.twitter.com/VGyzBoLPW8