வடிவேலுவின் கேங்கர்ஸ் டிரைலர்: யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்!
கேங்கரஸ் திரைப்படத்தின் டிரைலர் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
மத கஜ ராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சி இயக்கியுள்ள திரைப்படம் கேங்கர்ஸ்.
முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகனாக சுந்தர். சி, நாயகியாக கேத்ரீன் தெரசா முக்கிய கதாபாத்திரங்களில் வடிவேலு, வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஏப். 24 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் டிரைலர் நேற்று (ஏப். 1) வெளியானது.
இந்நிலையில் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளதாக படக்குழு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
மாமன்னனில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வடிவேலு பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளில் வடிவேலுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நகைச்சுவைக் படங்களும் காட்சிகளும் அமையவில்லை என ரசிகர்கள் புலம்புகிறார்கள்.
ஆனால், கேங்கர்ஸ் டிரைலரில் வடிவேலுவின் வசனங்களும் வித்தியாசமான தோற்றங்களும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் படத்தின் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
