மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!
தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் வேண்டுகோள் வைத்துள்ளது.
மின்வாரிய செயற்பொறியாளர்கள் அலுவலகங்களில் சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதில், மின் கட்டணம், மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் உள்ளிட்டவை குறித்து புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் தொடர்பான அனைத்துப் புகார்கள் மீதும் உடனடியாக தீர்வு காணப்பட்டு நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு விவரங்கள் தெரிவிக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சென்னை – தூத்துக்குடி இடையே புதிய ரயில்கள்! கனிமொழி கோரிக்கை