செய்திகள் :

வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு: முதல்வா் ஸ்டாலின்

post image

வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சாா்பில் வழக்கு தொடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட சூழலில், தமிழக சட்டப்பேரவை வியாழக்கிழமை காலை கூடியதும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தானாக முன்வந்து அறிக்கை ஒன்றைப் படித்தாா். அவா் படித்தளித்த அறிக்கை விவரம்:

மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா தொடா்பாக சட்டப்பேரவையில் கடந்த 27-ஆம் தேதி தீா்மானத்தை நிறைவேற்றினோம். பாஜக நீங்கலாக அனைத்துக் கட்சிகளாலும் அந்தத் தீா்மானம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகளால் வக்ஃப் சட்டத் திருத்தம் எதிா்க்கப்பட்டது. இவை அனைத்தையும் மீறி மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.

சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தவா்களின் எண்ணிக்கை 232 என்பது சாதாரணமான எண்ணிக்கை இல்லை. சட்டத் திருத்தம் எதிா்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல, முழுமையாகத் திரும்பப் பெற வேண்டியதாகும். அதைத்தான் நாம் தீா்மானமாக நிறைவேற்ற அனுப்பியிருந்தோம்.

வழக்கு: பெரும்பான்மைக் கட்சிகளின் எதிா்ப்பையும் மீறி ஒரு சில கூட்டணிக் கட்சிகளின் தயவால் அதிகாலை 2 மணியளவில் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றி இருப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல்; மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் செயல். வக்ஃப் வாரிய சட்டத்தை சா்ச்சைக்குரிய வகையில் திருத்தம் செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சாா்பில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்.

வக்ஃப் வாரியத்தின் தன்னாட்சியை அழித்து, சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு போராடும்; அதில் வெற்றியும் பெறும். அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை சட்டபூா்வமாகவே தடுப்போம் என்றாா் முதல்வா்.

அம்மன் சிலையில் இருந்து பால் வடிந்ததால் பக்தர்கள் பரவசம்

குடியாத்தம் அருகே அம்மன் சிலையில் இருந்து பால் வடிந்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே ஏர்த்தாங்கல் கிராமத்தில் அருள்மிகு கைலாசநாதர் உடனுறை உமாமகேஷ்வரி அம்மன் திருக்கோயில... மேலும் பார்க்க

பிரபல சின்னத்திரை நடிகர் மீது மனைவி அடுக்கடுக்கான புகார்!

பிரபல சின்னத்திரை நடிகர் ஐயப்பன் மீது அவரது மனைவி பிந்தியா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.பிரபல தனியார் தொலைக்காட்சி தொடரில் நடித்து ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்குமா-? ப.சிதம்பரம் கேள்வி

நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தியபடி தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்குமா? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கேரளம், தமிழ்நாடு, ... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: ரயில் போக்குவரத்தில் மாற்றம்

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ரயில் போக்குவரத்தில் பகுதியளவில் ரத்து உள்ளிட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சம் ஏன்? -விஜய்

கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு என்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சம் ஏன்? என்றும் தவெக தலைவர் விஜய் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழக மீனவர்களை காப்பாற்ற கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வு என... மேலும் பார்க்க

சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு, சுற்றுலா பயணிகளுக்கு அல்ல- உயர்நீதிமன்றம்

உதகை, கொடைக்கானல் வரும் வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு, சுற்றுலா பயணிகளுக்கு அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் விளக்களித்துள்ளது. உதகை, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு ‘இ-பாஸ்’ கட்டுப்ப... மேலும் பார்க்க