சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டம்: "ரயில்களை இயக்கும் உரிமை டெல்லி மெட்ரோவுக்கா?" ...
டாக்ஸிக் படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா!
யஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் யஷ் நடிப்பில் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ’டாக்ஸிக்’.
கேஜிஎஃப் - 2 படத்திற்கு அடுத்ததாக யஷ் நடிக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
கேவிஎன் புரோடக்ஷன்ஸ் மற்றும் நடிகர் யாஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு, மும்பையில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நடிகை நயன்தாரா டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இவர் நடித்த டெஸ்ட் திரைப்படம் வருகிறா ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து டாக்ஸிக் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணைவதற்காக நயன்தாரா மும்பை சென்றுள்ளார். தனது மகன்களுடன் அவர் மும்பை விமான நிலையத்திற்கு சென்ற நிலையில் அங்கு எடுக்கப்பட்ட விடியோ வெளியாகியுள்ளது.

டாக்ஸிக் திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.