செய்திகள் :

`அமெரிக்க மண்ணை விட்டு வெளியேறாதீர்கள்' - H1B விசா ஊழியர்களை எச்சரிக்கும் கூகுள், அமேசான்!

post image

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து சென்று அமெரிக்காவில் வசிக்கும் தொழில்நுட்ப வல்லுனர்களின் வருங்காலம் கவலைக்கிடமாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வகுத்துள்ள கடுமையான குடியேற்ற கொள்கைகள் காரணமாக கூகுள், அமேசான் போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள்கூட அங்கு H1B விசாவில் பணியாற்றும் உழியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரித்துள்ளன.

ஒருவேளை அமெரிக்க மண்ணை விட்டு வெளியேரும் ஊழியர்கள் மீண்டும் நாட்டுக்குள் அனுமதிக்கப்படாமல் போகலாம் என நிறுவனங்கள் அஞ்சுவதாகக் கூறப்படுகிறது.

Trump

அச்சத்தில் இந்திய ஊழியர்கள்

சென்ற முறை அதிபர் ட்ரம்ப் ஆட்சியில் இருந்தபோது நடந்ததைப் போல இப்போதும் அதிக திறமை உள்ள ஊழியர்களுக்காக வழங்கப்படும் விசாக்கள் மறுக்கப்படுவது அதிகரிக்கலாம் என வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள் தானாகவே அமெரிக்க குடிமக்களாக கருதப்படுவார்கள் என்ற சட்டத்தை ட்ரம்ப் அரசு மாற்றப்படும் அபாயம் உள்ளதால், தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் நாடற்றவர்களாக ஆகிவிடுவார்களோ என்ற அச்சம் H1B விசாவில் குடியேறியிருக்கும் பிற நாட்டினருக்கு ஏற்பட்டுள்ளது.

H1B விசா மூலம் அமெரிக்க நிறுவனங்கள் சிறப்பு தொழில்களுக்காக வெளிநாட்டு ஊழியர்களை அழைத்துக்கொள்ள முடியும்.

ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 65,000 விசாக்கள் அளிக்கப்பட்டு வந்தன.

சமீப ஆண்டுகளில் சீனர்கள் கனடியர்களுக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் அதிகபட்சமாக H1B விசாவில் அமெரிக்க சென்றது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்பத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் வெளிநாட்டவர்கள்

உலக அரங்கில் நடக்கும் தொழில்நுட்ப போட்டியில் அமெரிக்கா முன்னிலை வகிக்க சிலிக்கான் பள்ளத்தாக்கின் குடியேற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் சமூகம் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.

Tech Company

2018ம் ஆண்டு அமெரிக்க கொள்கைக்கான தேசிய அறக்கட்டளை சிந்தனைக் குழு (think tank National Foundation for American Policy) நடத்திய கணக்கெடுப்பில், 1 பில்லியன் டாலருக்கும் மேல் மதிப்புள்ள அமெரிக்க ஸ்டார்ட்-அப்களில் பாதிக்கும் மேற்பட்டவை புலம்பெயர்ந்த நிறுவனர் அல்லது இணை நிறுவனர்களைக் கொண்டிருந்தன.

மைக்ரோசாஃப்ட், கூகுள், உபர் மற்றும் சிப் நிறுவனமான என்விடியா போன்ற பல மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள் வெளிநாட்டவர்களாக உள்ளனர்.

ட்ரம்ப்பின் குடியேற்ற கொள்கைகள் இந்த சமூகத்தினருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தொழில்நுட்பத் துறையிலிருந்து குடியேறிய தொழிலாளர்களை குறைப்பது, செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்கும் போட்டியில் சீனாவுடன் போட்டியிடும் அமெரிக்காவின் திறனைத் குறைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tech Companies

செய்திகளின் படி, அமெரிக்காவில் அதிகப்படியாக H1B விசா ஊழியர்களைப் பணியமர்த்தியுள்ள நிறுவனமாக அமேசான் திகழ்கிறது. கூகுள், மெட்டா, மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றன.

ட்ரம்ப்பின் அரசு நிர்வாகத்தில் பணியிலிருக்கும் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்கின் டெஸ்லா நிருவனத்துக்காக கடந்த நிதியாண்டில் 1767 H1B விசாக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

கிரீன் கார்டுக்கு காத்திருக்கும் CEO

ட்ரம்ப்பின் குடியுரிமை கொள்கைகளால் H1B விசா ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர். சிலர் அச்சத்தின் காரணமாக இந்தியாவுக்கு வருவதற்கான தங்களது பயணத்திட்டத்தை ரத்து செய்ததாகத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவிலும் குடியுரிமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதனால், எப்போதும் தங்கள் ஆவணங்களை உடன் வைத்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் குழந்தை பெற்ற இந்திய தம்பதியினர் தங்கள் குழந்தையின் குடியுரிமை ரத்தாகலாம், எந்த நாட்டின் குடியிரிமையும் இல்லாத நிலை ஏற்படலாம் என அஞ்சுகின்றனர்.

ட்ரம்ப் ஆதரவாளர்கள் இடையே இந்த விஷயத்தில் முரண்பாடுகள் உள்ளன. சிலர் நாட்டின் நன்மைக்காக திறமையான நபர்களை வெளிநாடுகளில் இருந்து ஏற்றுக்கொள்வதற்கு உடன்படுகின்றனர்.

ஆனால் சிலர், அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை வெளிநாட்டினர் பறிப்பதாக எண்ணுகின்றனர். அமெரிக்காவில் கல்வியில் அதிக முதலீடுகளை மேற்கொண்டு திறமையான வல்லுநர்களை உருவாக்க வேண்டும் எனக் குரலெழுப்புகின்றனர்.

குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் நிரந்தரமாக அமெரிக்கார்கள் ஆவதற்கான வழியாக கிரீன் கார்டு உள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் கிரீன் கார்டுகள் வழங்கப்படும் செயல்முறை மிகவும் தாமதமாக நடத்தப்படுகிறது.

சமீபத்தில் $9 பில்லியன் மதிப்புள்ள AI நிறுவனமான Perplexity-ன் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ் கூட சமூக வலைதளத்தில், நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலை வழங்கும் ஒரு நிறுவனத்தை நிறுவிய போதிலும், கிரீன் கார்டுக்காக மூன்று ஆண்டுகளாகக் காத்திருப்பதாகதத் தெரிவித்திருந்தார்.

திருவண்ணாமலை : `பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும்; மே 15 வரை அவகாசம்’ - ஆட்சியர் எச்சரிக்கை

ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தினந்தோறும் ஆந்திரா, தெலங்கானாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். வட இந்தியர்கள், வெளிநாட்டவர்களின் வருகை கணிசமாக இருந்தாலும், தெலுங்கு மொழி பேசக்கூட... மேலும் பார்க்க

Ananya: `படிப்பு முக்கியம்; ஐ.ஏ.எஸ் ஆகணும்!' - சுப்ரீம் கோர்டை திரும்பி பார்க்க வைத்த 8 வயது சிறுமி!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த அனன்யா என்ற சிறுமியின் வீடு இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, தனது இல்லத்திலிருந்து புத்தகங்களை எடுத்துக் கொண்டு ஓடும் காணொளி சமூக வல... மேலும் பார்க்க

ஊட்டி: கடையடைப்பால் மூடப்பட்ட உணவகங்கள், மலிவு விலையில் சுடச்சுட பசியாற்றிய அம்மா உணவகங்கள்!

கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை வரைமுறைப் படுத்தும் நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளை சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்திருந்... மேலும் பார்க்க

திருவாரூர்: பயன்பாடற்ற நிலையில் இருக்கும் பேருந்து நிழற்குடை... அவதியுறும் பொதுமக்கள்!

திருவாரூர் தேரோடும் வீதியான வடக்கு வீதியில் உள்ள இந்த அண்ணா பேருந்து பயணிகள் நிழற்குடை, நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தையொட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும்,... மேலும் பார்க்க

ஏப்ரல் 6-ல் புதிய பாம்பன் பாலம் திறப்பு: பிரதமர் மோடி வருகை ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு!

நாட்டின் நிலப்பரப்பினை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில் பாம்பன் கடல் மீது ஆங்கிலேயர் காலத்தில் ரயில் பாலம் கட்டப்பட்டது. 1914ம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து சேவை துவக்கப்பட்ட இந்தப் பாலத்தை கப்ப... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: `ஆபத்தான சாலை' - சுட்டிக்காட்டிய விகடன்; பாதுகாப்பை உறுதிப்படுத்திய அதிகாரிகள்!

திருப்பத்துாரில் இருந்து பெரிய ஏரி வழியாக திருமால் நகர், மிட்டூர், ஆண்டியப்பனுார், ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குப் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அரசு மற்றும் தனியார்த் துறை ஊழியர்கள், தொழிலாள... மேலும் பார்க்க