செய்திகள் :

ரூ.14 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

post image

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரூ.14 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த 2 பெண் நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

மண்டலா மாவட்டத்தில் பிச்சியா காவல் நிலையத்திற்குட்பட்ட வனப்பகுதியில் நக்சல்கள் மற்றும் ஹாக் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் இன்று (ஏப்.2) காலை துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஒவ்வொருவர் மீதும் தலா ரூ.14 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்கள் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவின் மூலம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட காவலர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலின் படி அம்மாநிலத்திலுள்ள நக்சல்களை அழிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாகவும், கடந்த ஓராண்டில் மட்டும் 10 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: ராம நவமியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம்: இஸ்கான்

பயிற்சியில் பலியான 4 அமெரிக்க வீரர்களுக்கு லித்துவேனியா அரசு மரியாதை!

லித்துவேனியா நாட்டில் ராணுவப் பயிற்சியின்போது பலியான 4 அமெரிக்க வீரர்களுக்கு அந்நாட்டு அரசும் மக்களும் மரியாதை செலுத்துகின்றனர்.ஐரோப்பிய நாடான லித்துவேனியாவில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக... மேலும் பார்க்க

புதிய ஊழலில் சிக்கிய இஸ்ரேல் பிரதமர்?

இஸ்ரேல் பிரதமரின் நெருங்கிய கூட்டாளிகள் புதிய ஊழலில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நெருங்கிய கூட்டாளிகள் 2 பேர் கத்தார் நாட்டைப் பற்றி நேர்மறையாக இஸ்ர... மேலும் பார்க்க

கிரீஸ் கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து!

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவின் அருகில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள லெஸ்போஸ் தீவை நோக்கி அருகிலுள்ள துருக்கி நாட்... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்!

ஆஸ்திரேலியாவின் மேற்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் அப்பகுதி மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் தலைநகரான பெர்த் நகரத்தின் புறநகரின் வனப்பகுதியில... மேலும் பார்க்க

அடக்குமுறைகளை தாண்டி வளா்ந்துள்ளது கம்யூனிஸ்ட் இயக்கம்: கே.பாலகிருஷ்ணன்

மதுரை: தமிழகத்தில் பல்வேறு அடக்குமறைகளை தாண்டி கம்யூனிஸ்ட் இயக்கம் வளா்ச்சியடைந்துள்ளது என்று மத்தியக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் பேசினாா்.மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில்... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ், பாஜகவுக்கு எதிராக சித்தாந்தப் போரைத் தொடங்க வேண்டும்: டி. ராஜா

மதுரை: ஆா்எஸ்எஸ், பாஜகவுக்கு எதிராக சித்தாந்தப் போரை இடதுசாரிகள் தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி. ராஜா வலியுறுத்தினாா்.மதுரை தமுக்கம் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற ம... மேலும் பார்க்க