செய்திகள் :

Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்கு முதல்வர் கடிதம்

post image

வக்ஃப் சட்டதிருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் ஓரணியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த சட்டதிருத்த மசோதாவின் மீது 8 மணிநேரம் விவாதம் நடத்தப்படும் என்றும் தேவையைப் பொறுத்து கூடுதல் நேரம் விவாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வக்ஃப் சட்டதிருத்த மசோதாவை (Waqf Bill 2024) மத்திய அரசு முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

`வக்ஃப் வாரியங்களை பலவீனப்படுத்தும் திருத்தம்’

வக்பு வாரியம்

முதலமைச்சரின் கடிதத்தில், ``இந்திய அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கான உரிமையை வழங்குகிறது. அந்த உரிமையை நிலைநாட்டுவதும் பாதுகாப்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் கடமையாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

``இருப்பினும், வக்ஃப் சட்டம், 1995இல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள், சிறுபான்மையினருக்கு அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாததுடன் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்கு கடுமையான பாதிப்புகளை விளைவிப்பதாக இருப்பதாகவும்” தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

``தற்போதுள்ள வக்ஃப் சட்டத்தில் உள்ள அம்சங்கள் நீண்டகாலமாகச் சிறந்த பயன்பாட்டில் உள்ளதாக’ குறிப்பிட்டுள்ள முதல்வர், ``வக்ஃப் சொத்துக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் உள்ளன . வக்ஃப் சட்டத்தில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள், வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பதிலும், பாதுகாப்பதிலும் வக்ஃப் வாரியங்களின் அதிகாரங்களையும் பொறுப்புகளையும் பலவீனப்படுத்தும் வகையிலும் உள்ளதாக’’ தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், `தற்போதுள்ள சட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் முன்மொழியப்பட்டுள்ள பெரிய அளவிலான திருத்தங்கள், அச்சட்டத்தின் நோக்கத்தையே நீர்த்துப்போகச் செய்துவிடும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்

``உதாரணமாக, மாநில வக்ஃப் வாரியங்களில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை கட்டாயமாக சேர்ப்பது என்பது முஸ்லிம் சமூகத்தின் மத மற்றும் தொண்டு அறக்கட்டளைகளை சுயாதீனமாக நிர்வகிக்கும் திறனை மற்றும் மத சுயாட்சியை குறைத்து மதிப்பிடுவதாக அமைவதுடன், 'வக்ஃப் பயனர்' விதியை நீக்குவது பல வரலாற்று அடிப்படையிலான வக்ஃப் சொத்துக்களின் உரிமைக்கு அச்சுறுத்தலாக அமையும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மேலும், ``குறைந்தது ஐந்து ஆண்டுகள் இஸ்லாத்தை கடைப்பிடித்தவர்கள் மட்டுமே வக்ஃபுக்கு சொத்துக்களை நன்கொடையாக வழங்கமுடியும் என்ற நிபந்தனை முஸ்லிம் அல்லாதவர்கள் வக்ஃபுக்கு சொத்துக்களை நன்கொடையாக வழங்குவதைத் தடுத்துவிடும். இது நாட்டின் மத நல்லிணக்கக் கலாச்சாரத்திற்கு இடையூறாக இருக்கும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள 'வக்ஃப் சட்டம் 1995' போதுமானதாகவும், வக்ஃப்களின் நலன்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க தெளிவான ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாலும், வக்ஃப் சட்டம், 1995இல் இதுபோன்ற திருத்தங்கள் இப்போது தேவையில்லை என்பதே எங்கள் கருத்து.

முழுமையாக திரும்பப் பெறுக!

மேற்கூறிய அனைத்தையும் கருத்தில்கொண்டு, வக்ஃப் (திருத்த) சட்டம், 2024ஐ முழுமையாக திரும்பப்பெற ஒன்றிய அரசை வலியுறுத்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 27.3.2025 அன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது என்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானத்தின் நகலை இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளதாகவும், சிறுபான்மை முஸ்லிம் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும், வக்ஃப் அமைப்புகளைப் பாதுகாப்பதிலும் தாங்கள் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேற்கு வங்கம்: மம்தா பானர்ஜி நியமித்த 25,000 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆசிரியர் நியமனத் தேர்வுமேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசு 2016ம் ஆண்டு பள்ளிகளில் 25 ஆயிரம் ஆசிரியர்களைத் தேர்வு நடத்தித் தேர்ந்தெடுத்து பணியில் நியமித்தது.ஆசிரியர் நியமனத் தேர்வுக்காக நடத்தப்பட்ட த... மேலும் பார்க்க

கச்சத்தீவு : `திமுக செய்த தவறால்... தீர்மானம் வெறும் கண்துடைப்பு” - டிடிவி தினகரன் காட்டம்

தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அமமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ``வாக்குறுதி... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா : 'பாஜக-வுக்கு தேவை கடந்த காலத்தின் துர்நாற்றம்' - எம்.பி சு.வெங்கடேசன் காட்டம்

வக்ஃப் திருத்த மசோதா தாக்கல் என்ற பேச்சு எழுந்ததுமே எதிர்க்கட்சிகள் தொடங்கி பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் நேற்று(ஏப்ரல்-2) கடுமையான விவாதத்திற்கு பிறகு, மக்களவையில் வக்... மேலும் பார்க்க

கழுகார் அப்டேட்ஸ் : `பெண்புள்ளி... நாகப்புள்ளி’ - மலர்க் கட்சியின் தமிழக நாற்காலி யாருக்கு?

மோதிக்கொள்ளும் கோஷ்டிகள்!பல்கலைக்கழக `பதவி’ பாலிட்டிக்ஸ்...மான்செஸ்டர் மாவட்டத்திலுள்ள ‘பசுமையான’ பல்கலைக்கழகத்தில், உச்சப் பொறுப்பில் இருந்தவரின் பதவிக்காலம் சமீபத்தில் நிறைவுபெற்றது. அவர், மீண்டும் ... மேலும் பார்க்க

TVK : ஆர்வத்தோடு விஜய்; முட்டுக்கட்டையாக நிற்கும் `பவர்புல்' அணி? - தவெகவில் என்ன நடக்கிறது?

'பனையூர் அப்டேட்!'மாதத்திற்கு ஒரு நிகழ்ச்சி என நடத்தி திடீர் பேசுபொருளாகி மறைந்து விடுகிறது தவெக. பிப்ரவரியில் ஆண்டு விழா, மார்ச்சில் பொதுக்குழுக் கூட்டம் என நடத்தி முடித்தவர்கள், இந்த மாத இறுதியில் ப... மேலும் பார்க்க