செய்திகள் :

வக்ஃப் மசோதா : 'பாஜக-வுக்கு தேவை கடந்த காலத்தின் துர்நாற்றம்' - எம்.பி சு.வெங்கடேசன் காட்டம்

post image

வக்ஃப் திருத்த மசோதா தாக்கல் என்ற பேச்சு எழுந்ததுமே எதிர்க்கட்சிகள் தொடங்கி பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் நேற்று(ஏப்ரல்-2) கடுமையான விவாதத்திற்கு பிறகு, மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது இந்த வக்ஃப் வாரிய திருத்த மசோதா குறித்து எம் பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், " நேற்று நள்ளிரவு இரண்டு மணி அளவில் மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

வக்ஃப் வாரிய திருத்த மசோதா: நிறைவேற்றம்!
வக்ஃப் வாரிய திருத்த மசோதா: நிறைவேற்றம்!

வெறுப்பை கக்கித் தீர்த்தார்கள்

சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விவாதத்தில் ஆளும் கட்சியின் தரப்பில் பேசிய பலரும் வெறுப்பை கக்கித் தீர்த்தார்கள்.

எந்த வெறுப்புணர்வும், பேதங்களும், பிரிவினை ஏற்படுத்திய காயங்களும் மக்கி மண்ணோடு மறைய வேண்டுமென இந்திய சமூகம் தொடர்ந்து முயன்று வந்ததோ, அவற்றையெல்லாம் மீண்டும் கிளறி தேசத்தின் தலைப்பு செய்தியாக்கும் அரசியலை பாஜக செய்து முடித்தது.

அடுத்து வரும் நாட்களில் அவைகள் நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கப்படும். இன்று இஸ்லாமியர்களுக்கு நேர்வதே நாளை கிருஸ்துவர்களுக்கும். நாளை மறுநாள் பட்டியலினம், மற்றும் பழங்குடியினருக்கும். அதற்கு மறுநாள் பிற்பட்டோருக்கும்.

பாஜகவினருக்குத் தேவை கடந்த காலத்தின் துர்நாற்றம். எனவே அவற்றையே முழுநேரமும் சுவாசிக்க நினைக்கிறார்கள்.

நமக்கு தேவை நிகழ்காலத்துகான நல்வாழ்வும், எதிர்காலத்துக்கான நற்கனவும். பழைய பேய்களை நம் கனவுகளின் மீதும், சிந்தனையின் மீதும் ஏவிவிடும் பத்தாம்பசலிகளுக்கு எதிராக சலிப்பின்றி போரிடுவோம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

`கூட்டாட்சி தத்துவத்தின்மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் தாக்குதல்...' - பிரகாஷ் காரத்

``தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மூலம் 2026 க்கு பிறகு தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பெரும் சமநிலையின்மை ஏற்படும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் கா... மேலும் பார்க்க

`மாநில அரசு, மத்திய அரசின் விளம்பர தூதர்கள்போல செயல்பட இயலாது' - மதுரையில் பினராயி விஜயன் பேச்சு

"கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை அதிகரித்து வருவது மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.." என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியுள்ளார்.மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன்மதுரையில... மேலும் பார்க்க

PM MODI : CHINA -க்கு எழுதிய கடிதத்தை மறைத்தாரா? | Rahul Stalin Waqf Bill | Imperfect Show 3.4.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், * வக்ஃப் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!* ஊழலை வேடிக்கை பார்க்க முடியாது! - ரவிசங்கர் பிரசாத்* வக்ஃப் மசோதாவைக் கிழித்தெறிந்த அசாசுதீன் ஓவைசி!* "எப்படியாவது இந்துக்கள் - ... மேலும் பார்க்க

TVK : 'இந்திய அரசியலமைப்பின் மீதான களங்கம்!' - வக்ஃபு திருத்த மசோதாவுக்கு விஜய் எதிர்ப்பு!

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கும் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.Vijayஜனநாயகத்திற்கு எதிரான வக்ஃபு சட்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ஸ்மார்ட் சிட்டி பணியில் முறைகேடு, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ - சாடும் அதிமுக

புதுச்சேரி அதிமுக-வின் மாநிலச் செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``புதுச்சேரியில் மத்திய அரசின் 50% சதவிகித நிதிப் பங்களிப்புடன் கூடிய ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணி, கடந்த காங்கிரஸ் ஆட்சி... மேலும் பார்க்க